மழை குறுகிட்டதால் பாதிப்படைந்தது இந்தியா – வங்காளதேச டெஸ்ட் போட்டி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இந்தியா-வங்காளதேச கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி பாதுல்லாவில் இன்று தொடங்குகியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முரளி விஜயும், ஷிகர் தவானும் தொடக்க வீரர்களாக களமிறங்கி ஆடி வருகின்றனர்.ஷிகர் தவான் அரைசதத்தை கடந்து 74 ரன்களும் விஜய் 33 ரன்களும் எடுத்து இருந்தனர் அப்போது மழை குறுகிட்டதால் ஆட்டம் நிறுத்த்பட்டது..

வங்காளதேசத்துடன் ஒப்பிடும் போது இந்தியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவானது என்பதில் சந்தேகமில்லை. இழந்த பார்மை மீட்பதற்காக உள்ளூர் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்திய புஜாரா, இந்த ஆண்டில் சவுராஸ்டிரா மற்றும் கவுண்டி அணியான யார்க்ஷைர் அணிக்காக விளையாடி 2 சதமும், ஒரு அரைசதமும் அடித்து சராசரியாக 52.44 ரன்களை பெற்றார். இதனால் இந்த டெஸ்டை அவர் நம்பிக்கையுடன் எதிர்கொள்வார்.

இந்திய அணியை பொறுத்தரை 5 பவுலர்களுடன் இறங்குமா அல்லது 4 பவுலர்களுடன் இறங்குமா என்பதில் தான் குழப்பம் நீடிக்கிறது. கேப்டன் கோலி 5 பவுலர்களை சேர்க்க ஆசைப்படுகிறார். ஆனால் அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரியிடம் கலந்து ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்க முடியும். ஒரு வேளை கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளர் இடம் பெற்றால், ரோகித் சர்மாவின் இடம் காலியாகி விடும்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள தனது முழுமுயற்சியை காட்டுவார்.

இந்தியா: முரளிவிஜய், ஷிகர் தவான், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ரோகித் சர்மா, விருத்திமான் சஹா (விக்கெட்கீப்பர்), அஸ்வின், ஹர்பஜன்சிங் அல்லது கரண் ஷர்மா, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா அல்லது வருண் ஆரோன் அல்லது புவனேஷ்வர்குமார்.

வங்காளதேசம்: தமிம் இக்பால், இம்ருல் கேயஸ், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரம் (கேப்டன்), லிட்டான் தாஸ் (விக்கெட்கீப்பர்), ஷகிப் அல்-ஹசன், சவும்யா சர்கார், சுகவதா ஹோம் அலலது முகமது ஷகித், ஜூபைர் ஹூசைன், தைஜூல் இஸ்லாம், ருபெல் ஹூசைன்.
இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்து வருகிறது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*