தற்போது டென்னிஸ் ஆட்டம் மந்தமாகி இருக்கிறது – வருந்தும் பெக்கர்!

பிறப்பு : - இறப்பு :

உலகின் முன்னாள் நம்பன் ஒன் வீரரான ஜெர்மனியின் போரிஸ் பெக்கர், செர்பிய வீரர் ஜோகோவிச்சின் பயிற்சியாளராக இருந்து வருகிறார்.

தனது சுயசரிதை புத்தகத்தில் பெக்கர் தற்போதைய டென்னிஸ் ஆட்டத்தின் போக்கு குறித்து விமர்சித்து இருக்கிறார். பெக்கர் கூறியிருப்பதாவது:-

நான் விளையாடிய காலத்தை விட தற்போது டென்னிஸ் ஆட்டம் மந்தமாகி இருக்கிறது என்று என்னை பார்ப்பவர்களில் சிலர் சொல்வது உண்டு. நான் ஏன் என்று அவர்களிடம் கேட்ட போது, டென்னிஸ் ஆட்டத்தில் ஒரு கால கட்டத்தில் இருந்தது போல் பல்வேறு விதமான ஆக்ரோஷமான குணத்தை வெளிப்படுத்தும் வீரர்களை பார்க்க முடிவதில்லை என்று சொன்னார்கள்.

தற்போதும் ஆக்ரோஷமாக உணர்ச்சிகளை வெளிக்காட்டகூடிய வீரர்கள் உள்ளனர் என்பதை நான் அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர்கள் தங்களது கோபத்தை அப்படியே வெளிக்காட்டுவதில்லை.

ஏனெனில் மைதானத்தில் எங்கு பார்த்தாலும் மைக்ரோபோன்கள் பொருத்தப்பட்டுள்ளது. அவர்கள் பேசும் ஒவ்வொரு கோப வார்த்தையும், எதிர்வீரரை பற்றி திட்டுவதையும் மைக்ரோபோன்கள் தெளிவாக பதிவு செய்து விடுகின்றன.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit