இளம் வீரர்களின் வளர்ச்சியில் பங்கெடுப்பதை விரும்புகிறார் திராவிட்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

இளம் வீரர்களின் வளர்ச்சியில் பங்கெடுப்பதை விரும்புகிறேன் என்று, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட் தெரிவித்தார்.

இந்திய ஏ மற்றும் 19 வயதுக்குள்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக திராவிட் சனிக்கிழமை நியமிக்கப்பட்டார். இதுகுறித்து திராவிட் அளித்த பேட்டி:

இளம் அணியின் பயிற்சியாளராக என்னை நியமித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இளம் வீரர்களின் வளர்ச்சியில் பங்கெடுப்பதை எப்போதுமே விரும்புவேன். இந்திய ஏ அணியுடன் நான் மேற்கொள்ளும் பயணங்கள், 19 வயதுக்குள்பட்டோருக்கான அணியுடன் செலவிடும் நேரம் ஆகியவை, இளம் வீரர்களின் வளர்ச்சிக்கு உதவும் என நம்புகிறேன்.

இந்திய அணியின் பயிற்சியாளராவது குறித்து சிந்திக்கவில்லை. அடுத்த ஆறு மாதங்கள் இளம் வீரர்களுடன் நேரத்தை செலவிடும் வாய்ப்பை எதிர்நோக்கியுள்ளேன். இப்போதைக்கு இதுதான் இலக்கு. இளம் வீரர்களைப் பயிற்றுவதுபோல, இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவது அவ்வளவு எளிதாக இருக்காது. எனவே, தற்போதைய பணியில் திருப்தி அடைந்துள்ளேன் என்றார் திராவிட்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit