குட முழுக்கு கண்டான் சுவிஸ் பேர்ண் கல்யாண முருகன் (காணொளி, படங்கள் இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐரோப்பா கண்டத்தின் அல்ப்ஸ் மலைத்தொடரின் மத்தியில் அமைந்துள்ள சுவிஸ் நாட்டின் தலைநகரான பேர்ணிற்கு அண்மையில் உள்ள தொப்பன் எனும் அழகிய கிராமத்தில் மலையும் வயல் சார்ந்த இடத்தில் சொந்த நிலத்தில் உலகத் தமிழர்கள் பூரிப்படையும் வண்ணம் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர் ஆலயத்தில் நேற்றைய தினம் (07.06.2015) ஞாயிற்றுக் கிழமை குட முழுக்கு இடம்பெற்றது.

பஞ்சமித் திதியும் திருவோண நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய நேரமான காலை 11.15 முதல் 12.01 வரையான சிம்ம லக்கின சுபமுகூர்த்த வேளையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை, இந்தியா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த 50 இற்கு மேற்பட்ட முதுமை மிகுந்த, அனுபவம் உடைய சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்திருந்தனர்.

இவ் விழாவில் சுவிட்ஸர்லாந்து நாட்டின் அழகிய பசுவும் அதன் கன்றும் கொண்டுவரப்பட்டு அபிஷேசகங்களுடன் கௌரவப்படுத்தப்பட்டமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
மேலும் இந்நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டு முருகன் அருளைப் பெற்றதுடன், அன்னதான நிகழ்விலும் கலந்துகொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் 48 நாள் மண்டலா அபிஷேகம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என்பதையும் அடியவர்களுக்கு அறியத்தருகின்றோம்.

“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்”

சுவிஸ் பேர்ண் முருகன் ஆலய திறப்பு விழா !கதிரவன் உலா – சுவிஸ் பேர்ண் முருகன் ஆலயம் தொடர்பாக பிரபலங்களின் செவ்வி

Swiss Bern Kalyana Subramanya Temple Kumpavisekam (1) Swiss Bern Kalyana Subramanya Temple Kumpavisekam (2) Swiss Bern Kalyana Subramanya Temple Kumpavisekam (3) Swiss Bern Kalyana Subramanya Temple Kumpavisekam (4) Swiss Bern Kalyana Subramanya Temple Kumpavisekam (5) Swiss Bern Kalyana Subramanya Temple Kumpavisekam (6) Swiss Bern Kalyana Subramanya Temple Kumpavisekam (7) Swiss Bern Kalyana Subramanya Temple Kumpavisekam (8) Swiss Bern Kalyana Subramanya Temple Kumpavisekam (9) Swiss Bern Kalyana Subramanya Temple Kumpavisekam (10)

Swiss Bern Kalyana Subramanya  (1) Swiss Bern Kalyana Subramanya  (2) Swiss Bern Kalyana Subramanya  (3) Swiss Bern Kalyana Subramanya  (4) Swiss Bern Kalyana Subramanya  (5) Swiss Bern Kalyana Subramanya  (6)

 

இவ் ஆலய நிகழ்வுகள் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் செவ்விகளுக்கு இங்கே அழுத்தவும்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*