ஐந்தாவது முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்ததில் மகுடத்தை சூடியது பார்சிலோனா!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பெர்லினில் நடந்த இறுதிப்போட்டியில் யுவன்டஸை வீழ்த்தி பார்சிலோனா அணி ஐந்தாவது முறையாக மகுடத்தை சூடியது.

இந்த சீசனுக்கான (2014-15) ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டித் தொடர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இதில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிரபலமான 20 கிளப் அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனாவும், இத்தாலியை சேர்ந்த கிளப் அணியான யுவன்டசும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

4 முறை சாம்பியனான பார்சிலோனா கிளப்பில் புகழ்பெற்ற வீரர்களான லயோனல் மெஸ்சி, நெய்மர், லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் கால்பந்து ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பார்சிலோனா-யுவன்டஸ் இடையிலான இறுதிப்போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நேற்று (சனிக்கிழமை) நடந்தது. 

எதிர்பார்த்தது போலவே பார்சிலோனா யுவன்டஸை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து கோப்பை ஐந்தாவது முறையாக வென்றது. ஆனால் யுவன்டஸ் 6-வது முறையாக இறுதி போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் வாகை சூடியதின் மூலம் பார்சிலோனா அணி 2015-ம் ஆண்டு ‘பிபா’ உலக கோப்பை கிளப் கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*