கோயில் கட்டச் சேகரிக்கப்பட்ட நிதி பத்திரமாகவே இருக்கிறது சக்தி செ. சுரேஸ் அவர்களின் பிரத்தியேகச் செவ்வி!

பிறப்பு : - இறப்பு :

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் சுவிசில் மிகப்பெரிய ஆன்மீக நிறுவனங்களுள் ஒன்றாக இருந்து வருகின்றது. இந்த மன்றத்தின் ஸ்தாபகரான அருள்திரு பங்காரு அடிகளாரின் பவளவிழாவை யூன் 27 ஆம் திகதி மிகச் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ள இந்த மன்றத்தின் சுவிஸ் கிளைத் தலைவர் செ. சுரேஷ் அவர்களை கதிரவன் உலாவிற்காகச் சந்தித்தோம்.

இந்து சமயம் பல கிளைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பல மகான்களும், ஞானிகளும் அவ்வப்போது தோன்றி சமயத்தை வளர்ப்பதற்காக தொண்டு புரிந்துள்ளார்கள். இருந்தும் கூட இந்து சமயத்தில் பல விரிவாக்கங்கள் நடந்து கொண்டேயே இருக்கின்றன. அடிப்படைகள் ஒன்றாக இருந்தாலும் நடைமுறைகளில் மாறுபட்ட செயற்பாடுகளை அவதானிக்க முடிகின்றது. ‘மாறும் உலகில் மாறாதது மாற்றம் ஒன்றே” என்ற சொலவடைக்கு ஏற்ப, இந்து சமயத்திலும் பல பரீட்சார்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன. அத்தகைய ஒன்றுதான் இந்த மன்றமும்.

இந்த மன்றம் தொடர்பிலும், அதன் செயற்பாடுகள் தொடர்பிலும் கேள்விகளும், விமர்சனங்களும் எமது வாசகர்கள் மத்தியில் உள்ளன. உங்களின் குரலாக நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கான விடையே இந்தச் செவ்வி.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit