புலம்பெயர் இசை ஆர்வலர்கள் தமது திறமையை நிரூபிக்க மேலதிக பயிற்சி செய்ய வேண்டும் திரைப்பட இசையமைப்பாளர் இனியவன் செவ்வி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திரைப்படம் ஒன்று காட்சிப்படுத்தப்படும் போது ரசிக்கும் மனிதர்கள் யாவரும் அதன் பின்னணியில் உழைத்தவர்களை ஞாபகம் வைத்திருக்கிறார்களா என்பது கேள்விக்கு உரியது. முன்னணியில் தெரிபவர்கள் கூட நிலைத்து நிற்பார்கள் என்பது கூட நிச்சயமற்றது. திரைப்படங்கள் சில வேளைகளில் ஆற்றலற்றவர்களைக் கூட இமாலய உயரத்திற்கு ஒரே திரைப்படத்திலேயே உயர்த்தி விடுகின்றன. சிலர் ஆற்றல் இருந்தும் கூட முதற் படத்தலேயே காணாமற் போய் விடுகின்றார்கள். தென்னிந்திய தமிழ்த் திரைத்துறையைப் பொறுத்தவரை இந்த இரண்டு வகையானோருக்கும் எண்ணிக்கையில்லாத உதாரணங்கள் இருக்கின்றன.

இதில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் திரைப்பட இசையமைப்பாளர் இனியவன். 1992 ஆம் ஆண்டில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அறிமுகமான அதே ஆண்டில் கௌரி மனோகரி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் இவர். இசை ஜாம்பவான்களான கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆகியோர் இணைந்து பாடிய ‘அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது” என்ற பாடல் இவரது திறமைக்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு. இருந்தும் கூட முறையான வாய்ப்புக்கள் இல்லாது இருந்து வரும் இவர் தனது திறமையை நிரூபிக்கும் வகையில் இரண்டாவது சுற்றுக்குத் தயாராகி வருகின்றார்.

புலம்பெயர் தமிழர்களோடு இணக்கமான உறவுகளைப் பேணிவரும் இவர் ஆழிப்பேரலை தொடர்பில் கவிஞர் வைரமுத்துவால் எழுதப்பட்ட ‘வீழமாட்டோம்” என்ற பாடல் தொகுப்பிற்கு இசையமைத்துப் புகழ் பெற்றவர். பேரண் முருகன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் கலந்து கொள்ள சுவிஸ் வருகை தந்த இவர் கதிரவன் உலாவிற்காக வழங்கிய செவ்வி இதோ.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*