சொல்வதெல்லாம் உண்மையிலிருந்து லட்சுமி நீக்கப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. இந்த நிகழ்ச்சியை திரைப்பட குணசித்திர நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வந்தார். தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் திடீரென நீக்கப்பட்டு நடிகை சுதா சந்திரன் நடத்துகிறார். லட்சுமி ராமகிருஷ்ணன் திடீரென்று நீக்கப்பட்டது குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகிறது.

சொல்வதெல்லாம் உண்மையில் லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி உபயோகப்படுத்தும் “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…” என்ற வசனமும், “போலீசை கூப்பிடுவேன்…” என்ற வசனமும் ரொம்ப பாப்புலர். இப்போது அதனை சினிமாவில் கூட பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியிலிருந்து நீக்கப்பட்டதற்கு காரணமே “போலீசை கூப்பிடுவேன்…” என்கிற வசனம்தான் என்கிறார்கள்.

“நிகழ்ச்சிக்கு வருகிறவர்கள் போலீசுக்கு போனால் பிரச்சினை பெரிதாகும் என்றுதான் இங்கு வருகிறார்கள். இங்கும் அவர்களை போலீசை கூப்பிடுவேன் என்று மிரட்டினால் எப்படி அவர்கள் வருவார்கள். ஒரு கட்டத்துக்கு மேல லட்சுமி ராமகிருஷ்ணன் அதட்டலும், மிரட்டலும் அதிகமானது. நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் எங்களிடம் வருத்தப்பட்டு சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியில் பொறுமையும், சமயோசிதமாக சமாளித்தலும் முக்கியம். ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணன் உணர்ச்சிவசப்பட்டு நிகழ்ச்சியின் நோக்கத்தையை கெடுத்து விடுகிறார். அதனால்தான் வேறு வழியில்லாமல் அவர் மாற்றப்பட்டார்” என்கிறது சேனல் வட்டாரம்.

ஆனால் லட்சுமி ராமகிருஷ்ணன் தரப்பு இதனை மறுக்கிறது. “திரைப்பட இயக்கத்தில் தீவிர கவனம் செலுத்துவதால் நிகழ்ச்சியை விட்டு அவரே விலகிவிட்டார்” என்கிறார்கள். யார் சொல்வது உண்மை என்று யாருக்குத் தெரியும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*