குப்பைக்கிடங்கில் பணியாற்றியபோது கண்டெடுத்த ஒரு கோடி ரூபா !

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரே­ஸிலில் குப்­பைக்­கி­டங்கில் மீள்­சு­ழற்­சிக்­கான பொருட்­களை சேக­ரிக்கும் தொழிலில் ஈடு­பட்­டி­ருந்­த­போது, குப்­பை­களில் கிடந்த ஒரு கோடி ரூபா­வுக்கும் அதிக பெறு­ம­தி­யான காசோ­லை­களை கண்­டெ­டுத்து உரி­ய­வர்­க­ளிடம் சேர்ப்­பித்து புகழ்­பெற்ற யுவ­தி­யொ­ருவர் மொடல் அழ­கி­­யாக பணி­யாற்றும் வாய்ப்பை பெற்­றுள்ளார்.

23 வய­தான அனா சான்டோஸ் குரூஸ் எனும் இந்த யுவதி 3 வய­தான ஒரு மகனின் தாய் ஆவார்.

இரு வரு­டங்­க­ளுக்கு முன்னர் அனாவின் கணவர் கைது செய்­யப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்டார்.

அதனால், தனது மகன் சகிதம் பெற்­றோரின் வீட்டில் அவர் வசித்து வரு­கிறார்.

1024543

வறுமை கார­ண­மாக, நக­ரொன்றின் குப்­பைக்­கி­டங்­கொன்றில் மீள்­சு­ழற்சி செய்­யப்­ப­டக்­கூ­டிய பொருட்­களை சேரிக்கும் ஊழி­ய­ராக அவர் தொழில்­பு­ரிந்தார். தினமும் சுமார் 10 மணித்­தி­யா­லங்கள் அவர் பணி­யாற்­றினார்.

இதற்­காக மாதாந்தம் 850 பிரேஸில் றியால்­களை (சுமார் 36,000 ரூபா) அவர் ஊதி­ய­மாக பெற்­று­வந்தார்.

கடந்த ஜன­வரி 23 ஆம் திகதி வழ­மைபோல் குப்­பை­களை கிள­றிக்­கொண்­டி­ருந்­த­போது, ஒரு புத்­த­க­மொன்று கிடந்­தது.

ஒதுக்கி வீசப்­பட்­டி­ருந்த புத்­த­கத்தை வீட்டில் வைத்து வாசிப்­ப­தற்கு விரும்­பிய அனா சான்டோஸ், அதை எடுத்து வைத்­துக்­கொண்டார்.

பணி முடிந்து இரவு 7 மணி­ய­ளவில் வீடு திரும்­பி­யபின் அப்­புத்­த­கத்தை திறந்து பார்த்­த­போது, அதற்குள் ஒரு கடித உறை காணப்­பட்­டது.

அந்த கடித உறையை திறந்து பார்த்­த­போது அதற்குள் பல காசோ­லைகள் காணப்­பட்­டன. அவற்றின் மொத்த பெறு­மதி 250,000 பிரேஸில் றியால்கள்.

அதா­வது, சுமார் ஒரு கோடியே 7 லட்­சத்து 80 ஆயிரம் ரூபா. அக்­கா­சோ­லை­கள் பலவற்றில் பெறு­நரின் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை.

அவை, பிரே­ஸிலின் சாஓ பௌலோ நக­ரி­லி­ருந்து 423 கிலோ­மீற்றர் தூரத்­தி­லுள்ள புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையின் நிதி சேக­ரிப்பு நட­வ­டிக்­கை­யொன்­றின்­போது திரட்­டப்­பட்­டவை என்­பதை அனா சான்டோஸ் உணர்ந்­து­கொண்டார்.

மறுநாள் அவர் நேர­டி­யாக மேற்­படி வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று அதன் பணிப்­பாளர் ஹென்ரிக் பிரேட்­டா­விடம் காசோ­லை­களை ஒப்­ப­டைத்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*