நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக உயிருள்ளவரை போராடுவேன்! – கொந்தளிக்கும் விஷால்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சென்னையில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக உயிருள்ளவரை போராடுவேன் என்றார் திரைப்பட நடிகர் விஷால்.

புதுக்கோட்டையில் முத்தமிழ் நாடக சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடக நடிகர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டியபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எம்ஜிஆர், சிவாஜி போன்ற ஜாம்பவான்களின் உழைப்பால் உருவான நடிகர் சங்க கட்டிடம் தற்போது காடு போல காட்சியளிக்கிறது. அந்த இடத்தை தனியார் நிறுவனத்துக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடுவதாகக் கூறுகின்றனர். சாதாரணமாக ஓரிரு ஆண்டுகள் வாடகைக்கு விட்டாலே அந்த இடத்தை திரும்பபெற முடியாத நிலையைப் பார்த்து வருகிறோம்.

ஆனால், உங்களைப் போன்ற, எங்களைப்போன்ற நடிகர்களின் வியர்வையால் உருவான நடிகர் சங்க இடத்தை தனியாருக்கு விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த இடத்தில் நடிகர் சங்கமே கட்டிடம் கட்டுவதாக அறிவிக்கட்டும். அவர்கள் நான் காலில் விழுந்து வணங்கி வரவேற்பேன்.

அந்த இடத்தில் நடிகர் சங்கம் மூலம் கட்டிடம் கட்ட நான், ஜீவா, சூர்யா, ஆர்யா போன்ற நடிகர்கள் ஒன்றிணைந்து ஒரு திரைப்படத்தில் நடித்து அதிலிருந்து கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தலாம் என்கிற யோசனையையும் நிர்வாகிகளிடம் முன் வைத்திருக்கிறோம்.

இதேபோல கேரளாவில் முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடித்த படம் மூலம் ரூ. 15 கோடி வசூலான முன்னுதாரணம் உள்ளது. அந்த இடத்தில் திருமண மண்டபம் கட்டப்படவேண்டும். அதில் நாடக நடிகர்களின் வாரிசுகளின் திருமணத்தை நடத்த மின் கட்டணத்தை மட்டும் வசூலித்தால் போதும்.

நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டும் வரை ஓயமாட்டேன். இதில் ஒத்துழைக்காவிட்டால் இதை நிறைவேற்ற நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மொத்தத்தில் நாடகநடிகர்கள், திரைப்பட நடிகர்கள் நலனே முக்கியம். இதில் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு ஆளாகிவிடக்கூடாது. நம் லட்சியத்தில் வெற்றி பெற தேவைப்பட்டால் தேர்தலில் நிற்கும் முடிவை அனைவரிடமும் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.

திரைப்படக் கலைஞர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் எந்தவிதத் தெடர்பு இல்லாத நிலை இருந்து வருகிறது. மேலும், நான் நாடக கலைஞர்களை தரக்குறைவாக நான் ஒரு போதும் பேசியதில்லை.

ஆனால், நான் பேசியதாக வெளிவரும் தகவல் அனைத்தும் உண்மை இல்லை. நாடகக் கலைஞர்களை நேரில் சந்திப்பதற்காகவே இங்கு வந்துள்ளேன். நடிகர் சங்கத் தேர்தலுக்காக வாக்குச்சேகரிக்க வரவில்லை என்றார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*