யூ டியூபில் பெரும் வரவேற்பு கிடைத்த பாலிவுட் நடிகரின் குட்டீசுடனான லூட்டி!(வீடியோ)

பிறப்பு : - இறப்பு :

பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான விளம்பரம் என்றாலே அது திகட்ட திகட்ட அறிவுரை சொல்லும் வகையிலேயே இருக்கும் என்ற எண்ணத்தை அடியோடு மாற்றும் வகையில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்திருக்கும் விழிப்புணர்வு வீடியோ ஒன்று குழந்தைகளுடன் லூட்டி அடித்தபடி கலகலப்பாக உள்ளது. இதனால் இந்த வீடியோவிற்கு யூ டியூபில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

உங்களிடம் 750 ரூபாய் இருந்தால் நீங்கள் என்னவெல்லாம செய்வீர்கள்? மல்டிபிளக்ஸ் தியேட்டரில் காதலியுடன் படத்துக்கு போகலாம். பிராண்டட் ஷோரூம்களுக்குச் சென்று புதுத்துணிகள் எடுக்கலாம். அழகு சாதனப் பொருட்களுக்காக செலவு செய்யலாம். கிளப் மற்றும் டிஸ்கோவுக்கு சென்று ஆடிப்பாடிக் கொண்டாடலாம்.

இவற்றுடன் சேர்த்து பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் வயிறார சாப்பிடுவதற்காக ஒரே ஒரு முறை அந்த 750 ரூபாயை ஒதுக்கிப் பாருங்கள் என்று துளியும் அறிவுரை செய்யும் தொனியே இல்லாமல், கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் கேட்கும் ரன்வீருக்காக இந்த அட்சய பாத்திர திட்டத்திற்காக பலர் 750 ரூபாய் கொடுத்து வருகிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit