நல்ல கதை அமைந்து நடிக்கும் சூழ்நிலை உருவானால் மனைவியுடன் இணைந்து நடிக்க தயார்!

பிறப்பு : - இறப்பு :

கேரள மாநிலம் கொச்சியில் நடிகர் சூர்யாவின் ‘மாஸ் என்கிற மாசிலாமணி’ படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்க வந்த சூர்யா நிருபர்களிடம் கூறியதாவது:–

1997–ம் ஆண்டு ‘நேருக்கு நேர்’ என்ற படத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்தேன். அப்போது அவருடன் சேர்ந்து கேரளாவுக்கு வந்தேன். அவரை கண்டதும் இங்குள்ள ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்ததை கண்டு பிரமித்தேன். 17 ஆண்டுகளுக்கு பிறகு அதே போன்ற வரவேற்பு எனக்கும் கிடைத்துள்ளது. இதற்காக மலையாள ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். எனது மனைவி ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே’ என்ற படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.

இந்த படத்தில் நடிக்க அவருக்கு உதவிய மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூசுக்கும், நடிகை மஞ்சுவாரியருக்கும் நன்றி கூறுகிறேன். நல்ல கதை அமைந்து, நடிக்கும் சூழ்நிலை உருவானால் நானும், ஜோதிகாவும் சேர்ந்து நடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதன் பின்பு கொச்சியில் உள்ள படகு வீட்டில் சவாரி செய்தார். பின்னர் ஒரு மாலில் அன்று முழுவதும் ரசிகர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit