365 பெண்களுடன் டேட்டிங் சென்ற ’மயக்கம் என்ன’ சுந்தர் : அதிர்ச்சியில் திரையுலகம்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

செல்வராகவன் இயக்கத்தில் மயக்கம் என்ன படத்தில் தனுஷின் நண்பராக நடித்தவர் தான் சுந்தர். இவர் ஒரு வருடத்தில் தினம் ஒரு பெண் என 365 பேருடன் டேட்டிங் சென்றுள்ளார். இத்தனை பெண்களுடன் டேட்டிங்கா…? என்று பயப்பட வேண்டாம்.

இது குறித்து தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.இதில் ‘பெண்கள் என்று சொன்னதும் ஏதோ என் வயசுப்பொண்ணுங்ககூட கடலை வறுக்கிற விஷயம் என நீங்க நினைத்தால், ஐ யம் ஸாரி பாஸ். அதான் இல்லை. 105 வயசு பாட்டியில ஆரம்பிச்சு தொழில் அதிபர்கள், துப்புரவுப்பணியில் ஈடுபடும் பெண்கள், பாடகிகள், சினிமா நடிகைகள், இயக்குநர்கள், சமூக ஆர்வலர்கள், இல்லத்தரசிகள் என எல்லா ஏரியாவிலும் பெண்களோடு டேட்டிங் உண்டு. அவர்கள் எனக்கு சாப்பாடு வாங்கித் தருவார்கள்.

மனம்விட்டுப் பேசுவேன். அதற்கு பிரதிபலனாக அந்த மாத இறுதியில் ஏதேனும் ஓர் ஆதரவற்றோர் இல்லம், மறுவாழ்வு மையத்துக்குச் சென்று என் சொந்தச் செலவில் அவர்களுக்கு உணவளித்து அவர்களோடு சாப்பிடுவேன். இதுதான் என் திட்டம். என் டேட்டிங் ஐடியாவுக்கு நண்பர்கள் பண உதவி செய்ய இப்போது மும்பை, பெங்களூரில் இருக்கும் பல என்.ஜி.ஓ-க்கள் மூலம் ஆதரவற்றோர்களுக்கு ஒருநாள் வயிறார விருந்து கொடுக்க முடிகிறது.’ என்று உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளார். வாழ்த்துக்கள் சுந்தர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*