சாரிகாவின் கிளுகிளு காட்சிக்காக டெக்னீஷியன்கள் வெளியேற்றம்

பிறப்பு : - இறப்பு :

அரை நிர்வாண கோலத்தில் ஹீரோ சந்தோஷ், சாரிகா நடித்த காட்சி ‘நிராயுதம்’ படத்துக்காக படமானது.

இதுபற்றி இயக்குனர் எம்.பி.ராஜதுரை கூறியது:

அமெரிக்காவிலிருந்து திரும்பிய பந்தா பேர்வழி ஹீரோ சந்தோஷ். சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிபவர் சாரிகா. இரவில் வீடு திரும்புவதற்காக டாக்ஸியில் ஏறுகிறார் சாரிகா. அவரை மயக்க மருந்து ஸ்பிரே அடித்து கடத்துகிறான் கார் டிரைவர்.

மயக்கத்திலிருந்து கண்விழித்து பார்க்கும் சாரிகா அரைகுறை ஆடையுடன் இருப்பதை கண்டு திடுக்கிடுகிறாள். அங்கிருந்து தப்பிக்க முயலும்போது மற்றொரு அறையில் ஹீரோவும் அரை குறை ஆடையுடன் அடைத்துவைக்கப்பட்டிருப்பதை பார்த்து ஷாக் ஆகிறாள்.

இருவரும் எப்படி தப்பிக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ். ஊட்டியில் இக்காட்சி படமாக்கப்பட்டபோது படப்பிடிப்பு தளத்தில் ஒரு சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். சரவணகுமார் ஒளிப்பதிவு. கனி இசை. எம்.மனோஜ்குமார், எஸ்.மோகனசுந்தரம் தயாரிப்பு. வெங்கட்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit