உடம்பைக் குறைக்க உடற்பயிற்சி

பிறப்பு : - இறப்பு :

அஞ்சலிக்கு இனி நல்ல காலம்தான். சித்தி பாரதிதேவியுடன் பிரச்னை, அறிமுகப்படுத்திய இயக்குனர் மு.களஞ்சியத்துடன் பஞ்சாயத்து என எல்லா பிரச்னைகளும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன.

இப்போது ஐதராபாத்திலுள்ள வீட்டில் அம்மாவுடன் தங்கியுள்ள அவர், தமிழ்நாட்டில் ஷூட்டிங் இருந்தால் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
யாரையும் நேரில் சந்திக்க அனுமதிப்பதில்லை. செல்போனில் பேசுவதாக இருந்தால், உதவியாளர்களின் நம்பரில் மாறி மாறிப் பேசுகிறார். இமெயில் ஐ.டியையும் மாற்றிவிட்டார்.

ஜெயம் ரவியுடன் ‘அப்பாடக்கர்’, விமலுடன் ‘மாப்ள சிங்கம்’ படங்களில் நடிக்கும் அவர், மேலும் மூன்று படங்களில் நடிக்கிறார். அதைப்பற்றி அந்தந்த பட நிறுவனமே அறிவிக்கும் என்று சொன்ன அஞ்சலி, தினமும் உடற்பயிற்சி செய்து உடம்பைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit