பரபரப்பை ஏற்படுத்திய “பாகுபாலி” அனுஷ்காவின் போஸ்டர்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தெலுங்கு உலகின் பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ மௌலி இயக்கி வரும் பாகு பாலிபடத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அனுஷ்காவின் படம் அடங்கிய இந்த போஸ்டர் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்துள்ளது.

நடிகை அனுஷ்கா கையில் விலங்குடன், மனோகரா படத்தில் வரும் கண்ணாம்பாள் போல ஆவேசமாக இருப்பது போன்ற அந்த படம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப் படுத்தி உள்ளது. பாகுபாலி சரித்திரப் படமாக எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று மும்மொழிகளிலும் ஒரே நேரத்தில் படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

எஸ்.எஸ். ராஜமௌலி:

தமிழின் ஷங்கரைப் போல ஏன் ஷங்கரை விடவும் பிரமாண்ட படங்களை எடுத்து வருபவர் தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி சத்ரபதி , நான் ஈ,மகாதீரா போன்ற பிரபலமான வெற்றிப் படங்களை திரை உலகிற்கு அளித்தவர்.

தெலுங்கு சினிமா:

தெலுங்கு சினிமா ஹீரோக்கள் எல்லாருமே அடிக்கிற கலரில் சட்டை போட்டுக் கொண்டு மரத்தைக் கட்டிப் பிடித்து டூயட் ஆடிக் கொண்டிருக்கையில் மக்களின் கவனத்தை சரித்திரப் படங்களின் மீது திருப்பிய பெருமை இவரையே சாரும்.

நான் ஈ:

ஒரு ஈயை வைத்து இவர் சொன்ன கதையை எந்த கேள்வியும் கேட்காமல் ரசிகர்களை மெய்மறந்து பார்க்க வைத்தது. இந்திய அளவில் இது ஒரு புது முயற்சியாக ஏற்கப்பட்டு திரை உலக விமர்சகர்களை திரும்பி பார்க்க வைத்த படம் இது.

மகதீரா:

மகதீரா படம் குழந்தைகளையும் விரும்பி பார்க்க வைத்த நல்ல ஒரு பொழுது போக்கு அம்சம் உள்ள சரித்திரப் படமாக அமைந்தது. இதன் வெற்றி எந்த அளவுக்கு இருந்தது என்றால் நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு திரை அரங்குகளில் ரிலீஸ் செய்யும் அளவிற்கு இருந்தது..நடிகர் ராம் சரண் இதன் வெற்றியால் அனைவரின் கவனத்திற்கு உள்ளாகி அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க ஆரம்பித்தது தனிக் கதை.

பாகுபாலி:

கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கும் அதிகமாக எடுக்கப் பட்டு வந்த பாகு பாலி படம் இறுதிக் கட்ட வேளையில் உள்ள இந்த நேரத்தில் படத்தின் போஸ்டர் வெளியிடப் பட்டுள்ளது. இரு பகுதிகளாக எடுக்கப் பட்டு வரும் இப்படம் இந்த வருடம் முதல் பாகமும் அடுத்த வருடம் இரண்டாம் பாகமும் வெளியாக உள்ளது.படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? 150 கோடி.

அனுஷ்கா:

தமிழில் எந்த கனமான கதாபாத்திரத்திலும் இதுவரை நடிக்க வில்லை என்றாலும் தெலுங்கு உலகம் இவரை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறது.இவரது உயரமே சரித்திரப் படங்களுக்கு இவரை தேர்வு செய்யத் தோன்றுகிறதோ என்னவோ?

நட்சத்திரப் பட்டாளம்:

கதாநாயகன் பிரபாஸின் அம்மாவாக நடிகை ஸ்ரீதேவி நடிக்கிறார்.ஒரு முக்கியமான வேடத்தில் நம்ம ஊரு நடிகர் சத்யராஜ் நடிக்க திரிஷாவின் முன்னால் காதலன் ராணா (ஆரம்பம் படத்தில் அஜித்தின் நண்பனாக நடித்தவர்) மற்றும் தெலுங்கு நடிகர் கோபிசந்த் இருவரும் வில்லன் வேடத்தில் கலக்க இருக்கிறார்கள். படம் 3 டி டெக்னிக்கில் வெளியாக உள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*