மே தினக் கூட்டங்களைப் புறக்கணித்தார் மகிந்தா

பிறப்பு : - இறப்பு :

கொழும்பில் இன்று இடம்பெறும் எந்தவொறு மேதினக்கூட்டங்களிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில பங்காளி கட்சிகள் கிருலப்பனையில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்பார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஹைட்பார்க் கூட்டத்துக்கும் மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனினும் எந்தக்கூட்டத்துக்கு செல்வார் என்பது குறித்து எந்த தகவலையும் கூறாமல் அவர் அமைதியை கடைபிடித்து வந்தார்.

இந்தநிலையில் எந்த ஒரு மேதினக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கமாட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் முன்னாள் பேச்சாளர் விஜயாநந்த ஹேரத்தும் மகிந்த ராஜபக்ச எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கமாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit