திருமணம் முடித்த ஒரே வருடத்தில் விவாகரத்து கேட்கும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

திருமணமாகி ஒரே ஆண்டுக்குள் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்கிறாராம் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான ரம்யா.

ரம்யாவுக்கும் அபராஜீத் என்பவருக்கும் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இவரது திருமணத்துக்கும் சரி, திருமண வரவேற்புக்கும் சரி, மொத்த கோலிவுட்டே திரண்டது என்றால் மிகையல்ல.

இளம் நடிகர்கள் மொத்த பேரும் ஆஜர். ரஜினி, கமல் போன்ற பெருந்தலைகள் தவிர, மொத்த பேரும் ஆஜர்.

அந்த அளவு திரையுலகத் தொடர்புகள் மிகுந்தவர் ரம்யா. திருமணமான பிறகு, குடும்பப் பாங்கினியாக செயல்பட மறுத்துவிட்டாராம் ரம்யா. திருமணத்துக்கு முன்பு எப்படி மாலை நேர விருந்துகள், நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்தாரோ, அதே போலத்தான் திருமணத்துக்குப் பிறகும் இருந்துள்ளார்.

இது ஆச்சாரமான அபராஜித் குடும்பத்துக்குப் பிடிக்கவில்லையாம். இந்த நிலையில் நடிப்பிலும் குதித்தார் ரம்யா. தோழிப் பாத்திரம் என்றாலும் கவனிக்கும்படியான ஒரு வேடத்தில் ஓ காதல் கண்மணியில் நடித்தார்.

இப்போது அவருக்கும் வாய்ப்புகள் குவிகின்றனவாம். எனவே திருமண வாழ்க்கைக்கு குட்பை சொல்லிவிட்ட ரம்யா, உடனடியாக விவாகரத்துக்கு ஏற்பாடு செய்யும்படி கணவரிடம் கூறிவிட்டு, அம்மா வீட்டுக்கு வந்துவிட்டாராம்.

சீக்கிரமே குடும்ப நல நீதிமன்றப் படிகளில் ஏறலாம் இந்த ஜோடி என்கிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*