மயூரனின் சிறை வாழ்க்கை ஒரு பார்வை! (வீடியோ இணைப்பு)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மயூரன் சிறையில் இருந்த காலத்தில் சக கைதிகளுக்கு ஆங்கிலம், கணினி, வரைபட வடிவமைப்பு மற்றும் பல துறைகளில் சொல்லித் தந்தார். சிறைச்சாலையில் கணினி அறை மற்றும் சித்திர அறை ஆகியவற்றைத் திறக்க சுகுமாரன் முன்னின்று உழைத்தார். சுகுமாரன் கேர்ட்டின் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி மூலம் நுண்கலை படித்துப் பட்டம் பெற்றார். ஓவியம் வரைதலில் கெட்டிக்காரரான மயூரன் அவரும் அவரது சக தோழர்களும் தயாரிக்கும் ஓவியங்களை விற்பனை செய்வதன் மூலம் வணிகத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

இறுதிக் காலத்தில் நுசகம்பான்கன் தீவு சிறையில் இருந்த போது மயூரன் தன்னோவியங்கள் பலவற்றை வரைந்தார். இவரது கடைசி ஓவியம் இந்தோனேசியக் கொடியில் சிவப்பு-வெள்ளை நிறத்தில் குருதி வடிவதாக வரையப்பட்டிருந்தது.

■ மரணதண்டனை நிறைவேற்றம்

இந்தோனேசிய அரசின் ஆணைப்படி, மயூரன் சுகுமாரன், ஆன்ட்ரூ சான் மற்றும் வேறு ஆறு பேருக்கும் 2015 ஏப்ரல் 29 அன்று இந்தோனேசிய நேரம் அதிகாலை 12:25 மணிக்கு நுசகம்பாகன் தீவில் 12 பாதுகாப்புப் படையினரால் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. துப்பாக்கியால் சுடப்படும் போது மயூரனும் ஏனைய எழுவரும் தமது கண்களை மூடிக் கட்டுவதற்கு அனுமதிக்கவில்லை. மாறாக வியக்கத்தக்க அருள் என்ற கிறித்தவப் பாடலை அவர்கள் இணைந்து பாடிக் கொண்டிருந்தனர்

———————————–

ஒரு இளைஞனின்
மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தற்கு இத்தனை கூப்பாடு ஏன்..
ஏதோ பெரிய போதை மருந்து கடத்தல் கும்பலின் இரு தலைவர்களுக்கு மரண தண்டனை கொடுத்தற்காக இங்கு யாரும் பொங்கவில்லை..
சம்பந்தப்பட்ட அரசாங்கம் தூதரக உறவை முறித்து கொள்ளவும் இல்லை..
300g போதை மருந்து அவர்கள் தங்கியிருந்த அறையிருந்து எடுக்கபட்டதற்காக 10 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவர்களுக்கு தண்டனையே வழங்க கூடாது என்பது எங்கள் வாதம் அல்ல..
இது அவர்கள் செய்த குற்றத்திற்கு மிக அதிகமான தண்டனை என்பதுதான் எனது வாதம்.
ஆயுள் தண்டனை ஒன்றும் மரணதண்டனையைவிட குறைவான தண்டனை அல்ல.
அதுவும் 10 ஆண்டுகள் சிறையில் நன்னடத்தை வாசத்திற்கு பிறகு..
அவர்கள் கொன்றது ஒரு கொடுங் குற்றவாளியை அல்ல..
திருந்தி வாழ நினைத்த இளைஞனை..
சிறைவாசம் அவனை ஒரு ஓவியனாக மாற்றியது..
ஒரு கலைஞனை அவனது கலையை கொன்றுள்ளது ஒரு மரணதண்டனை..
இது ஏதோ தமிழன் என்பதற்காக மட்டும் இந்த பரிவு இல்லை…
அரபு நாடுகளில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட அந்த இளம் பெண்ணிற்காகவும்…
குற்றத்திற்கு மிக அதிகமாக
அதற்கு முன்னும் கொடுரமான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட அத்தனை மனிதர்களுக்குமான எங்களது அழுகுரல்..
இவை மாற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் வாதம்..
இங்கே பதிவு போட்டு என்ன கிழித்தீர்கள் என்றால்..
நீங்கள் மரணதண்டனை கொடுத்து கிழித்ததை விட அதிகமாக கிழித்துள்ளோம்…

11188261_917035971688527_446440850738162991_n

muren (2)

– நன்றி : சாரு ஆனந்த் –

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*