வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதி மக்கள் காணி உறுதி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வவுனியா பாரதிபுரம் விக்ஸ்காட்டுப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் தாம் குடியிருக்கும் நிலத்துக்கான காணி உறுதியை வழங்குமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று வியாழக்கிழமை வவுனியா பிரதேச செயலகம் முன்பு ஒன்று கூடிய அப்பகுதி மக்கள் தமக்கான காணி உரிமைகளை வழங்குமாறு கோரி பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று மாவட்ட செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் ‘விக்ஸ்காட்டு மக்களின் பிரச்சினையில் அரசாங்கம் கண்மூடி இருப்பது ஏன்?’ ‘நிரந்தர காணியும் சுதந்திர வாழ்வும் எமக்கு வேண்டும்’ ‘புதிய அரசாங்கம் எமக்கு புனர்வாழ்வைத் தா’ ‘விக்ஸ்காட்டு மக்களின் அவல நிலையை தீருங்கள்’ ‘காலம் முழுக்க காட்டு வாசி வாழ்க்கைதானா’ என்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளைத் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி மக்களுடன் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும் கலந்து கொண்டார். இதேவேளை தமக்கு காணி உறுதி வழங்கக் கோரியும் அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் மக்களால் அரசஅதிபரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
வனவளத் திணைக்களத்துக்குச் சொந்தமான இந்தக் காணியில் இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 7 வருடங்களாகக் குடியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டத்தின் போது கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்
வவுனியா பாரதிபுர மக்கள் கடந்த ஆறு வருடங்களாக மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருந்த போதும் காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்தார். தொடர்ந்து உரை நிகழ்த்திய வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீழ்குடியேற்றத்திற்கான எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லையென குற்றஞ்சாட்டிய அவர் வவுனியாவில் வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள் என சுட்டிக்காட்டினார்.

வவுனியா கலாபுஸ்பவ என்ற இடத்தில் அம்பாந்தோட்ட காலி போன்ற மாவட்டங்களை சேர்ந்த மக்களை குடியேற்றியிருப்பதாக தெரிவித்ததுடன் செட்டிகுளம் பாவக்குளம் போன்ற இடங்களில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளில் வெளிமாவட்டத்தை சேர்ந்த சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.

பாரதிபுரமக்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்களோ ஏனைய எந்த வசதிகளோ செய்து கொடுக்கவில்லையென குற்றஞ்சாட்டினார். ஆகவே புதிய அரசாங்கம் மக்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*