பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாத்திரமே செல்ல வேண்டும்; துரைராஜசிங்கம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தற்போது இருக்கும் பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாத்திரமே செல்ல வேண்டும். இதில் உறுதியாக எமது மக்கள் இருக்க வேண்டும். எமது வாக்குப் பலத்தினை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

கிரான் குடும்பிமலைப் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு விவசாய அமைப்புகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பொதுமக்கள் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித்தலைவர் கி.சேயோன், விவசாய அமைச்சின் இணைப்புச் செயலாளர், மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்!

தற்போது எமது நாட்டில் ஊழல் மோசடிக்கு எதிராக பல்வேறு செயற்திட்டங்கள் இடம்பெறுகின்றன. அவற்றை நிறுத்துமாறும் பாராளுமன்றத்தில் 55 உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறான நிலை இன்று ஊழல் செய்தவர்களுக்கு இருக்கின்றது.

நாடு ஒரு நல்ல நிலை நோக்கி சென்று கொண்டிருக்கும் தற்போதைய இந்த நிலையில் மாற்றம் ஏற்படக் கூடாது. மத்திய அரசில் இனி ஒரு மாற்றம் ஏற்படின் அது தேசிய அரசாங்கம் உருவாகும் விதத்திலேயே அமைய வேண்டும்.

எமது அன்றாட பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வருவதற்கு தற்போது இருக்கும் பாராளுமன்றம் கலைக்கப்படுமாயின் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மாத்திரமே செல்ல வேண்டும். இதில் உறுதியாக எமது மக்கள் இருக்க வேண்டும். இவ்விடயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக நாம் இருக்க வேண்டும்.

எமது வாக்குப் பலத்தினை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்பட வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை அந்தக் கதிரையில் இருந்து இறக்குவோம் என்று யாராவது நினைத்தும் கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஏதோ ஒரு நம்பிக்கையில் வாக்களித்தோம் ஆனால் எம் அனைவரின் ஒற்றுமையான வாக்களிப்பு பங்களிப்பு அதனைச் செய்தது. எவற்றாலும் செய்ய முடியாததை எமது ஒரு புள்ளடி சாதித்தது.

எனவே எமது புள்ளடியை முழுமையாக பயனுள்ள விதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எமது மக்கள் வழங்க வேண்டும். வடக்கு கிழக்கில் இருந்து வேறு தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர்ந்த வேற்று கட்சி எவரும் பாராளுமன்றம் செல்லக் கூடாது என்பதில் எமது மக்கள் திடமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்,

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*