மட்டு.பேத்தாழை பொது நூலகத்தில் உலக புத்தக தின நிகழ்வு!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கிவரும் பேத்தாழை பொது நூலகத்தில் உலக புத்தக தின நிகழ்வு புதன்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது.

நூலகத்தின் நூலகர் அ.அருமைநாயகம் தலைமையின் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சி.சந்திரகாந்தன், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் ஜனாப்.எஸ்.எம்.சிஹாப்தீன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சி.குகநேசன் மற்றும் வாசகர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

‘புத்தகங்கள் உருவாக்கிய மனிதர்கள்’ எனும் மகுடத்தின் கிழக்கின் மூத்த படைப்பாளிகளான, 50 வருடங்களுக்கு மேலாக சமூக, கலை, இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வரும் வாழைச்சேனையைச் சேர்ந்த ஓய்வு நிலை அதிபரும், பிரதேச சமய இலக்கிய முன்னோடியும் சோதிடருமான பெ.புண்ணியமூர்த்தி, வாகரையைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட கவிஞர். வித்துவான் எஸ்.வாகரைவாணன், திருப்பழுகாமத்தைச் சேர்ந்த கவிஞர். ஆ.மு.சி.வேலழகன் ஆகிய மூன்று மூத்த படைப்பாளிகளும் வாசகர்கள், மாணவர்கள் முன்னிலையில் கௌரவித்து பாராட்டப்பட்டனர்.

பிரதேச நலன் விரும்பிகள் புத்தக தினத்தினை சிறப்;;;பிக்கு முகமாக நூலகத்துக்கு நூல்கள் அன்பளிப்பு வழங்கும் நிகழ்வும் இணைந்து நடைபெற்றது.

இதன்போது சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட பேத்தாழை பொது நூலகத்தின் நிறுவனரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் மூத்த படைப்பாளிகள் மூவருக்கும் பொன்னாடை அணிவித்து, நினைவுச் சின்னங்களை வழங்கி கௌரவித்தார்.

கடந்த வருடம் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்ட பொது நூலகங்களுக்கான தரப்படுத்தல் போட்டியில் பிரதேச சபைகளின் கீழ் இயங்குகின்ற நூலகங்களுள் அகில இலங்கை ரீதியாக முதலிடத்தைப் பெற்றுள்ள பேத்தாழை பொது நூலகமானது, கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற நூலகங்களுள் தரம்-2க்கு தரமுயர்த்தப்பட்டுள்ள முதலாவது பொது நூலகமுமாகும்.

அவ்வகையில் இந்நூலகமானது தொடர்ந்தும் பிரதேச மட்டத்தில் பல முன்னோடியான நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. அதன் ஒரு அங்கமாக புத்தக தின சிறப்பு நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்,

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*