மட்டு.பாசிக்குடாவில் ஓவ் சைற் தன்னியக்க இயந்திரம் சம்பத் வங்கியினால் திறப்பு!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வாழைச்சேனை பாசிக்குடாவில் ஓவ் சைற் தன்னியக்க இயந்திரம் (OFF SITE ATM) செவ்வாய்கிழமை சம்பத் வங்கியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது உள்ளுர், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பிரதேச பொதுமக்களின் நன்மை கருதியே பாசிக்குடா வீதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது சம்பத் வங்கியின் 341 ஆவது ஓவ் சைற் தன்னியக்க இயந்திரம் என்பதுடன், கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது தன்னியக்க இயந்திரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டமாவடி சம்பத் வங்கி முகாமையாளர் எஸ்.நீலவண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சம்பத் வங்கியின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் ந.ஜெயசீலன் கலந்து கொண்டதுடன், மட்டக்களப்பு சம்பத் வங்கி முகாமையாளர் எஸ்.சுரேஸ், காத்தான்குடி சம்பத் வங்கி முகாமையாளர் ரீ.சிவபாலன் மற்றும் செங்கலடி சம்பத் வங்கி முகாமையாளர் எஸ்.கோபிநாத் ஆகியோர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இவ் தன்னியக்க இயந்திரம் திறக்கப்பட்டதன் மூலம் சிரமமின்றி பனத்தினை பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்,

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit