80 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் நின்றபடி விநோதத் திருமணம்! (படங்கள்)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிரிட்டனில் மிக உயரமான இடத்தில் ஒரு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.

கிறிஸ் புல் உயரமான இடங்களில் கயிறுகளைக் கட்டி நடக்கும் கலைஞர். 15 வருடங்களாக இந்தக் கலையை நிகழ்த்தி வருகிறார்.

அவரிடம் கடந்த 4 வருடங்களாக நடக்கும் பயிற்சியை எடுத்து வந்தவர் போபே பேக்கர்.

இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். வழக்கமான திருமணமாக இல்லாமல் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர்.

ஹோல் கேவ்ஸ் என்ற மலைப்பகுதிக்குச் சென்றனர். 80 அடி உயரத்தில் கயிறுகளைக் கட்டினர். திருமணத்துக்கு 100 விருந்தினர்கள் வந்திருந்தனர். மெகாபோன் மூலம் திருமணச் சடங்கு நடைபெற்றது.

அனைத்தையும் கயிற்றில் நின்றபடியே இருவரும் செய்து முடித்தனர். மோதிரங்களையும் மாற்றிக்கொண்டனர்.

பிரிட்டனில் இதுவரை இப்படி ஓர் உயரமான இடத்தில் திருமணம் நடைபெறவில்லை என்பதும் கயிறுகளில் நடக்கும் கலைஞர்கள் இருவர் திருமணம் செய்துகொண்டதும் சாதனையாக மாறிவிட்டது!


wedding-on-rope

wedding-on-rope2

 

wedding-on-rope4

wedding-on-rope5

wedding-on-rope6

 

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*