பாராளுமன்ற தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னனி (ஈரோஸ்) பங்கு கொள்ளும்; செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஈழவர் ஜனநாயக முன்னனி (ஈரோஸ்) பங்கு கொள்ளும். வடக்கு-கிழக்கு மாகாணங்கள் மாத்திரமல்லாது மலையகம் வரை ஈரோஸ் இயக்கம் தேர்தலில் பங்கு கொள்ளவுள்ளதாக அக் கட்சிசியின் செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் ஈழவர் ஜனநாயக முன்னனியின் அலுவலகம் ஒன்றினை புதன்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைத்து கலந்து கொண்ட மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் உரையாற்றுகையில்!

எதிர்வரும் எந்த தேர்தல் என்றாலும் ஈரோஸ் பங்கு கொள்ளும். இம் மக்களுக்கு நல்லதொரு தலைமைத்துவத்தினையும் ஒரு நல்ல சமுகத்தினையும் உருவாக்க வேண்டும்.
மக்களுக்குரிய தேவைகளை நிறைவேற்ற வேண்டும். விதவைகளினதும், ஊனமுற்றவர்களின் வாழ்க்கைத் தரத்தினையும் மலர வைக்க வேண்டும். ஏழை மக்களின் வயிறு நிரம்பி அவர்கள் சந்தோஷமாக வாழ வேண்டும்.

இவை அத்தனையும் நிறைவேற்ற வேண்டும் என்றால் அரசியல் அங்கிகாரம் ஈரோஸ் கட்;சிக்கு தேவை. இந்த அரசியல் அங்கிகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காகவே ஈரோஸ் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வட-கிழக்கு மற்றும் மலையகங்களில் தேர்தலில் பங்கொள்ள திட்டமிட்டுள்ளது.

கடந்த 1988 இல் நடை பெற்ற தேர்தலில் 13 பாராளுமன்ற உறுப்பினர்களை தன் வசம் வைத்திருந்த ஈரோஸ் இம்முறை 13 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொள்ள முடியா விட்டலும் குறைந்தது 5 பாராளுமன்ற உறுப்பினர்களையாவது நாம் கட்டாயமாக பெற்றுக் கொள்ள முயற்சிப்பேன்.

அதன் பின்னர் அன்று தொடக்கம் இம் மக்களின் வாழ்க்கையை உன்னத நிலைக்கு கொண்டு வருவதற்கு பாடுபடுவேன். இதற்கு நீங்கள் அனைவரும் என்னுடன் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்.

இவ் நடவடிக்கை தனிப்பட்ட பிரபாவினால் மாத்திரம் முடியாத காரியமாகும். நீங்கள் எல்லோரும் பிரபாவாக மாறவேண்டும். நீங்களும் நானும் சேர்ந்து ஒரு தலைமைத்துவத்தினை உருவாக்க வேண்டும். நீங்கள் இதனை சாதிக்க ஒத்துழைப்பு வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.

ஈரோஸ் எந்த கால கட்டத்திலும் எந்த அரசாங்கம் வந்தாலும் அந்த அரசாங்கத்துடன் இணைந்து மக்களின் தேவைகளை நிறைவேற்ற பாடுபடும். நாம் தற்போதைய நிலையில் அரசாங்கத்தினை ஆதரித்தால் தான் பின்தங்கி காணப்படும் எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இன்று எமது சகோதர இனக் கட்சியினை பாருங்கள். அவர்கள் அரசாங்கத்தினை ஆதரிப்பதால் இன்று அபிவிருத்தியின் உச்ச கட்டத்திற்கு சென்றுள்ளனர்.

எனவே நாம் பட்ட துன்பம் போதும். எமது வாழ்க்கைக்கு ஒரு நல்லதொரு விடிவு காலம் வேண்டும். எனவே நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு அரசியல் அந்தஸ்த்தை ஈழவர் ஜனநாயக முன்னனி (ஈரோஸ்)க்கு வழங்க முன்வாருங்கள் என்றார்.

ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்,

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*