2 ஓட்டங்களால் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

8வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 28வது லீக் ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை(29) இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா, முதலில் களத்தடுப்பினைத் தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 135 என்ற எளிதான இலக்கையும் விரட்டி பிடிக்க முடியாத கொல்கத்தா 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னையிடம் தோல்வியடைந்தது.

கொல்கத்தா அணியில் பந்துவீச்சு சர்ச்சையால் முக்கிய வீரர் சுனில் நரைன் கழமிறங்கவில்லை. அத்துடன் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்க்கலும் ஆடவில்லை. அதற்கு பதிலாக பேட்கம்மின்ஸ் மற்றும் பிராட் ஹாக் சேர்க்கப்பட்டனர். 44வயதான ஹாக் ஐபிஎல்லில் விளையாடும் வயது முதிர்ந்த வீரராவார்.

சென்னை அணி சாரடபாக டுபிளெசிஸ் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார். டுவைன் ஸ்மித் 25 ஓட்டங்களும், மெக்கல்லம் 19 ஓட்டங்களும் பெற்றனர்.

கொல்கத்தா தரப்பில் பியூஷ் சாவ்லா மற்றும் அன்ட்ரு ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எனவே, 135 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கொல்கத்தா ஆடியது.

முதல் ஓவரிலேயே கௌதம் கம்பீர் தான் சந்தித்த முதல் பந்தில் டக் அவுட் ஆனார். ஈஸ்வர் பாண்டே பந்தில், டோணியின் பிடியெடுப்பிலேயே இவர் ஆட்டமிழந்தார்.

ஆனால், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரொபின் உத்தப்பா அதிரடியாக விளையாடினார். அவர் 17 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்று அஸ்வின் பந்தில் மெக்கல்லத்திடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் களம் புகுந்த கொல்கத்தா அணி விரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. மனிஷ் பாண்டே 15 ஓட்டங்கள், சூர்ய குமார் யாதவ் 16 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யூசுப் பதான் 13 ஓட்டங்களுடனும், அன்ட்ரு ரசல் 4 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 31 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், கைவசம் கொல்கத்தாவிடம் இரு விக்கெட்டுகள் மட்டுமே இருந்தன.

ஆஷிஷ் நெக்ரா வீசிய 18 ஆவது ஓவரில் 14 ஓட்டங்கள் கிடைத்தது. எனவே கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே கொல்கத்தாவிடம் இருந்தது.

டென்டஸ்கத்தே, மற்றும் பிராட் ஹாக் களத்தில் இருந்தனர். பிராவோ கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் ஓட்டமெதுவும் பெறப்படவில்லை. ஆனால், அதற்கு அடுத்த இரு பந்துகளுமே டென்டஸ்கத்தே துடுப்பில் படாமல் விக்கெட் கீப்பரிடம் சென்றது.

எனினும் அடுத்த பந்தில் டென்டஸ்கத்தேயின் துடுப்பின் மூலம் ஆறு ஓட்டம் பெறப்பட கடைசி இரு பந்துகளில் 11 ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 5 ஆவது பந்தில் டென்டஸ்கத்தே பவுண்டரி அடித்தார். எனவே கடைசி பந்தில் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

கடைசிப் பந்தில் டென்டஸ்கத்தே ஆறு ஓட்டங்கள் பெற்றுக்கொண்டால் போட்டி சுபர் ஓவருக்கு நகரும் எனும் நிலையில் டென்டஸ்கத்தேயால் நான்கு ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.

எனவே 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி வாகை சூடியது. சென்னை தரப்பில் பிராவோ அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*