​யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!

பிறப்பு : - இறப்பு :

தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ். மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (29) முற்பகல் 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது.

பட்டதாரி கல்வி நெறி நிறைவடைந்து சுமார் 4 ஆண்டுகள் பூர்த்தியாகின்ற போதிலும் இதுவரை தமக்கு எவ்வித நியமனங்களும் கிடைக்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

தமது கோரிக்கைகள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர், மாகாண ஆளுநர் மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

வட மாகாண பட்டதாரிகள் சங்கத்தினரின் குற்றச்சாட்டுக்கள் குறித்து வட மாகாண முதலமைச்சின் இணைப்புச் செயலாளர் எஸ் சண்முகப்பிரியனிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

மாகாணத்தில் நிலவும் வேலைவாய்ப்புகளுக்கு அமைய பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தொடர்ந்தும் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக வட மாகாண முதலமைச்சின் இணைப்புச் செயலாளர் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit