நடிகை ஊர்வசி குடிபோதையில் தகராறு (வீடியோ))

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தென்னிந்திய சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஊர்வசி.

இவர், சமீபத்தில் வெளியான தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதுதவிர, கமல் நடிப்பில் மே1 ஆம் திகதி திரைக்கு வரவிருக்கும் உத்தம வில்லன் படத்திலும் நடித்திருக்கிறார்.

கடந்த 2 தினங்களுக்கு முன் கேரள சட்டசபையில் பணிபுரியும் இடது தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் ஊழியர் சங்க ஆண்டு விழா சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.

நடிகை ஊர்வசி உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். ஆனால், விழாவுக்கு வந்த ஊர்வசி குடித்துவிட்டு நிதானமிழந்த நிலையில் வந்துள்ளார்.

இதையறியாத விழா பொறுப்பாளர்கள் மேடையில் பேச ஊர்வசிக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், அவர் குடிபோதையில் இருந்ததால் என்ன பேசவதென்று தெரியாமல் மேடையில் உளறியிருக்கிறார்.

விழா நடத்துபவர் யார் என்று தெரியாத அளவுக்கு அவரது உளறல் இருந்திருக்கிறது.

உடனே அவரை விழா மேடையிலிருந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் அவர் மேடையில் இருந்து இறங்க மறுத்ததோடு தொடர்ந்து விடாப்பிடியாக பேசியிருக்கிறார்.

அவரை ஒரு வழியாக மேடையில் இருந்து இறக்கி காரில் ஏற்றி அனுப்ப முயன்றிருக்கிறார்கள். ஆனால், அவர் காரில் ஏறாமல் விழா பொறுப்பாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*