வடபகுதி குடிநீர் பிரச்சினைக்கு மனிதாபிமானத்துடன் செயற்பட்டு தீர்வு காண வேண்டும்; ஜனாதிபதி!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வடபகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அனைத்து தரப்பினரும் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

வடபகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு கேட்போர் கூடத்தில் நேற்று (27) மாலை நடைபெற்றுள்ளது.

அங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி வடபகுதி மக்கள் குடிநீர் பிரச்சினையால் அசௌகரியத்தை எதிர்நொக்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

வடபகுதியில் நிலவும் குடிநீர்ப்பிரச்சினை தொடர்பில் வடமாகாண ஆளுநர் மற்றும் வடக்கு முதலமைச்சருடன் கலந்தாலோசித்து தேவையான தீர்வுகளை முன்வைக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்தோடு சட்டவிரோத மணல் அகழ்வு, வடமாகாணத்தில் பாரிய சுற்றாடல் பிரச்சினையாக உருவெடுத்து வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினை மேலும் வலுவடைய இடமளிக்காது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit