விடுவிக்கப்பட்ட படகுகளை கொண்டு செல்ல தமிழக மீனவர் குழு இலங்கை வருகை

பிறப்பு : - இறப்பு :

இலங்கையில் விடுவிக்கப்பட்டுள்ள 14 படகுகளை கொண்டு செல்வதற்காக தமிழக மீனவர் குழு இன்று (28) இலங்கை வரவுள்ளது.

இன்று (28) காலை இராமேஸ்வரத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்துள்ள மீனவர் குழுவில் 84 பேர் அடங்குவதாக இராமேஸ்வரத்தில் உள்ள எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கடந்த வருடம் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 80 படகுகள் இந்த வருட முற்பகுதியில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய விடுவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 2 கட்டங்களாக இலங்கைக்கு வருகைதந்த தமிழக மீனவர்கள், 50 படகுகளை கொண்டு சென்றுள்ளனர்.

இன்று (28) இலங்கைக்கு வருகைதரவுள்ள தமிழக மீனவர் குழுவில் புதுக்கோட்டை மற்றும் நாகை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் அடங்குவதாக எமது செய்தியாளர் கூறினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit