பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று (28) வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாக கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன சிறப்புரிமை கேள்வியொன்றை முன்வைத்திருந்தார்.

அண்மையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முன்பாக மக்கள் ஒன்றுகூடிய இடத்திற்கு தாம் சென்றிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதனால் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை பாராளுன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமையை மீறுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் கருத்து வெளியிடுகையில் மக்கள் ஒன்றுகூடும் இடத்திற்கு செல்வதற்கான உரிமை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா, என்பது தொடர்பில் ஆராய்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (28) தெரிவித்துள்ளார்.

நிதிமன்றமும் பாராளுமன்றமும் தனித்தனியாகவே இயங்குவதாகவும் பிரதமர் சபையில் குறிப்பிட்டுள்ளார்.

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.

இன்றைய விவாதம் ஆரம்பமாவதற்கு முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே வர்த்தமானி அறிவித்தலொன்று தொடர்பில் அக்ராசனத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

பாரிய நிதி மோசடி விசாரணைப் பிரிவு நியமிக்கப்பட்டமை மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாகவே பாராளுமன்ற உறுப்பினர் சபையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

பிரதமர் தலைமையிலான அமைச்சரவை உப குழுவின் ஊடாகவே பாரிய நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கான முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய செயற்பாடுகளால் நல்லாட்சியை எதிர்ப்பார்க்க முடியுமா, எனவும் காமினி லொக்குகே கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் உள்ள நடைமுறையை பின்பற்றியே இலங்கையிலும் நிதி மோசடி தொடர்பான செயலகம் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் இந்த விசாரணைகளுக்கு அச்சமடைந்துள்ளதாக பிரதமர் சபையில் தெரிவித்துள்ளார்.

பாரிய நிதி மோசடி பிரிவுக்கான முறைப்பாடுகள் அமைச்சரவை உபகுழு ஊடாக முன்வைக்கப்படுவதால் அரசியல் தலையீடுகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்று (28) குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய பதில்களை வழங்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும சபையில் இன்று (28) குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது, 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால் அது மக்களின் ஆணையை மீறுவதாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார்

19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீதான விவாதத்தின்போது ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டதாக எமது பாராளுமன்ற செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*