தராகி எனப்படும் சிவராம் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு பத்து வருடங்கள்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு வழங்கும் முக்கியத்துவமே மக்களாட்சியின் அடையாளமாகும். இலங்கையில் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டமை மனித உரிமை மீறல்களாகும்.

இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான தராகிஎன்றழைக்கப்படும் சிவராம் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு பத்து ஆண்டுகள்கடந்துவிட்டன.

பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில் பாராளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

1959, ஆகஸ்ட் 11, ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989 இல் தன் முதல் கட்டுரையை எழுதினார்.

அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள்நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவலாக வாசிக்கப்பட்டன.

பத்தி எழுத்தாளராக அரசியல் ஆய்வாளராக படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட சிவராம் ஆரம்பத்தில் 1980களில் போராட்ட இயக்கம் ஒன்றில் இணைந்துகொண்டார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) முழுநேர செயற்பாட்டாளராக மாறிய சிவராம் 1990களின் நடுப்பகுதியில் அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றினார்.

தமிழ் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவந்த சிவராம் அதற்காக பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் சந்தித்தார்.

இலங்கையில் நிலவும் ஊடக – கருத்துச் சுதந்திர மறுப்பு சூழலைக் காட்டும் சிவராமின் படுகொலை நடந்து பத்து வருடங்கள் கடந்துவிட்டன.

நிமலராஜன், சிவராம் போன்ற ஊடகவியலாளர்களின் கொலைகளுக்குப் பொறுப்பான குற்றவாளிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*