கமநல கால்நடை அமைப்புகளுடனான விசேட கலந்துரையாடல் நிகழ்வு வாகரை பிரதேச செயலகத்தில்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மேய்ச்சல் தரைக் காணி பங்கீடு செய்தல் மற்றும் கமநல கால்நடை அமைப்புகளுடனான விசேட கலந்துரையாடல் நிகழ்வு வாகரை பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.

வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், வாகரை பிரதேச உதவி திட்டமிடல் அதிகாரி எஸ்.கங்காதரன், மற்றும் அமைச்சிற்குட்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள், கமநல அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பாகவும், அதனை பங்கீடு செய்தல் தொடர்பாகவும், மேச்சல் தரை ஒதுக்கீடு, கால் நடை பண்ணையாளர் சங்க பதிவுகள், காட்டு யானை வேலி, குளங்கள் புனரமைப்பு போன்ற அபிவிருத்தி செயற்பாடுகள் பற்றி, கமநல அமைப்புகள், கால்நடை வளர்ப்பாளர்கள் போன்றோரின் பிரச்சினைகள் தொடர்பில் ஆரயயப்பட்டதுடன், இது தொடர்பில் நேரடியாக அதிகாரிகளின் கருத்துக்களும் கேட்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டது.

இங்கு அமைச்சர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்! கடந்த காலங்களில் இங்கு இடம்பெற்ற நிகழ்வுகள் சட்டத்திற்கு மீறியே இடம்பெற்றன. சட்டத்திற்கு உட்பட்டு உரிய விடயங்கள் உரிய முறையில் கையாளப்படவில்லை. ஆட்சியில் இருப்பவர்களின் விருப்பத்தின் பேரில் அவரவர்க்கு உரியவர்களுக்கு சலுகைகள் இதர விடயங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அவ்வாறான நிலை தற்போது இல்லை. அந்த நிலை தொடர்ந்தும் இருத்தல் கூடாது இதனை அதிகாரிகளும் மக்களும் மனதில் நிறுத்தி செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்,

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*