யோகேஸ்வரன் எம்.பி தனது 45 பிறந்த நாளை முன்னிட்டு வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கினார்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தனது 45 பிறந்த நாளை முன்னிட்டு வறிய மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை ஞாயிற்றுக்கிழமை மாலை வழங்கி வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமது அலுவலகத்தில் வைத்து சில வறிய மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

அத்தோடு பாராளுமன்ற உறுப்பினரின் பிறந்த நாளையொட்டி வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ இயக்கத்தின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களின் ஒருவருமான செல்வம் அடைக்கலநாதன், வட மாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம் ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்துக்கு வருகை தந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

வறிய மாணவர்களுக்கான உதவிகளை வழங்கிய மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் அவர்களுக்கு அம்மாணவர்கள் தமது நன்றிகளை தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனின் பிறந்த தினத்தில் பல சேவைகள் வழங்கும் நிகழ்வுகள் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
yokes

yokes2

yoks3
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்,

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*