வாழைச்சேனை கறுவாக்கேணியில் தமிழர் காணிகளில் முஸ்லிம்கள் அத்துமீறி குடியேற்றம்; தடுத்து நிறுத்தமாறு யோகேஸ்வரன் எம்.பி கோரிக்கை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

வாழைச்சேனை கறுவாக்கேணிக்கு அண்மையில் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளில் முஸ்லிம் திடீரென குடியேறும் சம்பவம் நடைபெற்றதை அறிந்து மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இப்பகுதிக்கு சென்று அத்துமீறிய குடியேற்றச் செயற்பாட்டை பார்வையிட்ட பின் இதை தடுத்து நிறுத்துமாறு பிரதேச செயலகம் மூலம் வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிலும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கடந்த பல காலமாக வாழைச்சேனை மீறாவோடை தமிழ் பகுதியில் முஸ்லிம்கள் திடீரென அத்துமீறி காணிகளை பிடிக்கும் சம்பவம் நடைபெற்று வந்தது. இது நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இவ்வேளை மேலதிகமாக உள்ள காணிகளில் அண்மையிலும் சில முஸ்லிம் குடும்பங்கள் தமிழ் பகுதியில் அத்துமீறி சென்று காணிகளை பிடித்ததுடன், உடனடியான சுற்றுவேலி அமைத்து தென்னம் கன்றுகளையும் நடும் செயற்பாடு நடைபெறுகின்றது.

இதனை தடுக்க பொலிஸார் பின்வாங்குவதான சுட்டிக்காட்டி இப்பகுதி பொது மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் கவனத்துக்கு கொண்டு வந்த போது பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாக சென்று பார்வையிட்டு பின்னர் அருகில் உள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் சென்று இதை தடுத்து நிறுத்துமாறும், அத்தோடு இதற்கான வழக்கு 2015.05.05 நீதிமன்றில் வருவதால் இப்பகுதியில் எவரையும் செல்ல விடாது தடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

இவ்விடயமாக விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வாழைச்சேனை பிரதேச செயலாளரை கேட்டுள்ளார்.

தற்போது தேர்தல் நெருங்குவதால் ஒரு சில அரசியல் வாதிகள் வாக்குகள் பெறும் நோக்கில் தமிழர் பகுதிகளில் முஸ்லிம்கள் காணி பிடிக்கும் செயற்பாட்டை ஊக்குவிப்பதாகவும், தமிழ் முஸ்லிம் முரண்பாடுகள் வருவதற்கு அவர்கள் வழி ஏற்படுத்துவதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
mus5

mus4

mus3

mus2

mus1

mus
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்,

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*