பொதுமன்னிப்பில் 18 ஆயிரம் இராணுவத்தினர் பணியிலிருந்து நீக்கம்; இராணுவ பேச்சாளர் !

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

சேவையிலிருந்து தப்பியோடிய இராணுவ வீரர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இன்று முதல் இடம்பெறவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சேவையில் இருந்து தப்பியோடிய இராணுவ வீரர்கள் சட்ட ரீதியாக இராணுவத்தில் இருந்து விலக வழங்கப்பட்ட பொது மன்னிப்புக் காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

இதன்படி குறித்த காலப்பகுதியில் சட்ட ரீதியாக விலகாதவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை இன்று முதல் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, குறித்த பொது மன்னிப்புக் காலத்தில் இதுவரை 23ஆயிரத்து 600 பேர் இராணுவத்தில் இருந்து சட்டரீதியாக விலக கோரியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்களில் 18ஆயிரத்து 500 பேர் சட்ட ரீதியாக விலக்கப்பட்டுள்ளதாகவும் ஜயநாத் ஜயவீர மேலும் குறிப்பிட்டுள்ளார். மீதமுள்ளவர்களையும் எதிர்வரும் சில தினங்களில் விலக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit