யாழ். குடாவில் போலி நாணயத்தாள்கள்; பொதுமக்களே மிகவும் அவதானம் !

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

யாழ். குடாநாட்டில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதனால் பொதுமக்கள் அனைவரையும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு யாழ்.வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் – சிங்கள புதுவருடத்துடன் புதிய நாணயத்தாள்கள் அச்சிட்டு புழக்கத்தில் விடுப்பட்டுள்ளது. எனவே அதனை சாதாகமாக பயன்படுத்தி போலி நாணயத்தாள்களும் விசமிகளால் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு தற்போது விடப்பட்டுள்ளது.

அந்தவகையில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் யாழ்.குடா நாட்டில் அதிகரித்துள்ளது. 5000 , 1000 , 500 ஆகிய தாள்களே போலியாக வெளியிடப்பட்டுள்ளன. எனவே வியாபார நிலையங்களில் உள்ளவர்களும் , பொதுமக்களும் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

அவதானமற்று இருந்தால் சட்ட நடவடிக்கைகளுக்குக் கூட ஆளாகலாம் என வணிகர் கழகத்தினர் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*