விஜயகாந்துடன் பிரதமரைப் பார்க்க யார் யார் போகிறார்கள்?… மு.க. ஸ்டாலின் விளக்கம்

பிறப்பு : - இறப்பு :

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் சேர்ந்து கனிமொழி உள்ளிட்ட திமுக பிரதிநிகள் பிரதமரைச் சந்திப்பார்கள் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா கட்டும் மேகதாது அணை தொடர்பாக கருணாநிதி உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று சந்தித்தார். அதனைத் தொடர்ந்து நாளை பிரதமர் மோடியை அவர் சந்திக்கிறார்.அப்போது மற்ற கட்சிப் பிரமுகர்களும் அவருடன் செல்ல உள்ளனர். இந்நிலையில், விஜயகாந்துடன் சேர்ந்து பிரதமரை சந்திக்கும் திமுக நிர்வாகிகள் குறித்து விபரத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஸ்டாலின்.

அப்போது அவர் கூறியதாவது :-

பிரதமரை விஜயகாந்த் சந்திக்கும்போது திமுக சார்பில் கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் உடன் செல்வார்கள். மேகதாது பிரச்சனையில் விஜயகாந்த் எடுக்கும் முயற்சியை கலைஞர் பாராட்டினார். தமிழக பிரச்சனைகளை கொண்டு செல்ல வேண்டிய அதிமுக அரசு செயலற்றதாக உள்ளது என்றார்.

அதனைத் தொடர்ந்து கோபாலபுரம் சாரதா பள்ளியில் தேர்தல் அணையத்தால் நடத்தப்பட்ட சிறப்பு முகாமிற்கு வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சரிபார்த்து, தனது ஆதார் எண்ணை இணைப்பதற்கு விண்ணப்பித்தார் ஸ்டாலின்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit