மும்பையை கலங்கடித்த ஸ்மித்-மெக்கல்லம்: சென்னை “ஹாட்ரிக்’ வெற்றி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

டுவைன் ஸ்மித்-பிரன்டன் மெக்கல்லம் ஜோடியின் புயல் வேக ஆட்டத்தால் சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸ் கதிகலங்கியது. முடிவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் “ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 12-ஆவது லீக் ஆட்டத்தில் இந்த இரு அணிகளும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

பார்த்தீவ் படேலுடன், ஆரோன் ஃபின்ச்சுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட லென்டில் சிம்மன்ஸ் தொடக்க வீரராகக் களமிறங்கினார்.

ஏற்கெனவே தொடக்கத்தில் தடுமாறி வருகிறோம் என்று புலம்பி வரும் மும்பை அணியினருக்கு இந்த ஆட்டமும் அதேபோல அமைந்துவிட்டது. படேல் (0), கோரி ஆன்டர்சன் (4), சிம்மன்ஸ் (5) ஆகியோர் சென்னை வீரர்களின் அசத்தலான ஃபீல்டிங்கால் தங்களது விக்கெட்டை அடுத்தடுத்து பறிகொடுத்து வெளியேறினர்.

இதனால் 12 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி தவித்தது. தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மாவுடன், ஹர்பஜன் சிங் ஜோடி சேர்ந்தார். கடந்த இரண்டு ஆட்டங்களில் டக் அவுட்டில் வெளியேறிய ரோஹித் இந்த முறை சுதாரித்துக் கொண்டார்.

ரோஹித்தும், ஹர்பஜனும் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் அவர்களால் ரன்குவிப்பில் துணிந்து பேட்டை சுழற்ற முடியவில்லை.

முதலில் நிதானித்த ஹர்பஜன் போகப் போக பந்துகளை விளாச முயன்றார். அதில் ஒரு பந்து ஜடேஜாவிடம் சிக்கியது. இதனால் ஹர்பஜன் 24 ரன்களுடன் (21 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) பெவிலியன் திரும்பினார்.

தொடர்ந்து பொல்லார்டு களமிறங்கினார். மறுமுனையில் ரோஹித் அரை

சதத்தை நோக்கி முன்னேறினார். அவருக்கு பொல்லார்டு கைகொடுக்க, மிடில் ஆர்டரில் இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

ரோஹித்-பொல்லார்டு அரை சதம்: குறிப்பாக ஜடேஜாவின் 14-ஆவது ஓவரில் பொல்லார்டு அதிரடியாக 3 சிக்ஸர் ஒரு பவுண்டரி விளாச அந்த ஓவரில் மட்டும் மும்பை 26 ரன்கள் சேர்த்தது.

15-ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 31 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என தனது அரை சதத்தை பூர்த்தி செய்த நிறைவுடன் வெளியேறினார். இதன் பின் 7-ஆவது விக்கெட்டுக்கு அம்பாதி ராயுடு களமிறங்கினார்.

தொடர்ந்து ஆடிய பொல்லார்டும் தனது அரை சதத்தை பதிவு செய்தார். பொல்லார்டை பின்பற்றி ராயுடுவும் வெளுத்து வாங்கினார். இதனால் கடைசி கட்டத்தில் ஸ்கோர் விறுவிறுவென எகிறியது. பிராவோ வீசிய இறுதி ஓவரில் ராயுடு 29 ரன்களுடனும் (16 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்), பொல்லார்டு 64 ரன்களுடனும் (30 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்ஸர்) ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 183 ரன்கள் எடுத்தது.

புயல்வேகத்தில் ரன்குவிப்பு: இதையடுத்து கடினமான வெற்றி இலக்கான 184 ரன்களை நோக்கி சென்னை அணி தனது இன்னிங்ûஸ தொடங்கியது. தொடக்க வீரர்களாக டுவைன் ஸ்மித்தும், பிரன்டன் மெக்கல்லமும் களமிறங்கினர்.

ஆரம்பம் முதலே இருவரும் மும்பை அணியின் பந்துவீச்சை வெளுத்துக்கட்டினர். பவுண்டரி, சிக்ஸர் என பந்துகள் பறந்துகொண்டிருந்தன. இதனால் மும்பை அணியினர் செய்வதறியாமல் திகைத்தனர்.

மலிங்காவின் 4-ஆவது ஓவரில் 21 ரன்கள் விளாசி அதிரடிக்கு அஸ்திவாரமிட்டது ஸ்மித்-மெக்கல்லம் ஜோடி.

சுஜித்தின் 5-ஆவது ஓவரிலும் அதே பாணியில் வெளுக்க அந்த ஓவரின் முடிவில் சென்னை அணி 72 ரன்களை தொட்டது. இந்த ஸ்கோரை முதலில் பேட்டிங் செய்த மும்பையுடன் ஒப்பிடுகையில் அந்த அணி 5-ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

தொடர்ந்து 6-ஆவது ஓவரை வீசிய ஹர்பஜனும் தனது பங்குக்கு 18 ரன்களை வழங்கி நிம்மதியிழந்தார்.

ரன்ரேட் மின்னல் வேகத்தில் பயணிக்க 6.5-ஆவது ஓவரிலேயே சென்னை அணி 100 ரன்களை எட்டியது.

ஸ்மித் அரை சதம்: ஹர்பஜன் மறுபடியும் வீசிய 8-ஆவது ஓவரில் மும்பையை கலங்கடித்துக் கொண்டிருந்த இந்த ஜோடி விடைபெற்றது. மெக்கல்லம் 20 பந்துகளில் 6 பவுண்டரி, இரண்டு சிக்ஸர்கள் உள்பட 46 ரன்கள் எடுத்து வினய்குமாரிடம் கேட்ச் ஆனார்.

மற்றொரு தொடக்க வீரரான ஸ்மித் 30 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உள்பட 62 ரன்களுடன் ரோஹித் சர்மாவிடம் கேட்ச் ஆனார்.

இதன் பிறகே மும்பை அணிக்கு உயிர்வந்தது. தொடர்ந்து டு பிளெஸ்ஸிஸ் (11 ரன்கள்), கேப்டன் தோனி (3 ரன்களிலும்) பெவிலியன் திரும்பினர்.

ரெய்னா கடைசி வரை நிலைத்து நின்றார். அவருக்கு பிராவோ மறுமுனையில் இருந்து ஒத்துழைக்க 16.4 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 189 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி “ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது. மும்பை அணி தொடர்ந்து 4 ஆட்டங்களில் தோற்று பரிதாப நிலையில் உள்ளது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சென்னை வீரர் நெஹ்ரா ஆட்டநாயகனாக தேர்வானார்.

சுருக்கமான ஸ்கோர்

மும்பை 183/7

கீரான் பொல்லார்டு 64

ரோஹித் சர்மா 50

சென்னை 189/4

டுவைன் ஸ்மித் 62

பிரன்டன் மெக்கல்லம் 46

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*