ரஹானே அரை சதம்: கடைசிப் பந்தில் ராஜஸ்தான் வெற்றி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசிப்பந்தில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹைதராபாத் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின் இந்த ஆட்டத்திலும் களமிறங்கவில்லை. கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக இயான் மோர்கன் சேர்க்கப்பட்டார். ராஜஸ்தான் அணியில் மாற்றம் இல்லை.

டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டேவிட் வார்னரும், ஷிகர் தவணும் ஹைதராபாத்தின் இன்னிங்ûஸ தொடங்கினர். 2-ஆவது ஓவரில் மூன்று பவுண்டரிகளை விளாசி வார்னர் கொஞ்சம் மிரட்டினார். தவல் குல்கர்னி வீசிய 4-ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் தவண் 10 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் ஆனார். அடுத்த சில நிமிடங்களிலேயே வார்னரை, ரஹானே ரன்அவுட் செய்தார். 14 பந்துகளை சந்தித்த வார்னர் 3 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 21 ரன்களுடன் நடையைக் கட்டினார். இன்னொரு வீரரான ராகுல் தவண் 2 ரன்களுடன் எல்பிடபுள்யூ முறையில் குல்கர்னியிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 35 ரன்களுக்குள்ளாகவே மூன்று முன்னணி பேட்ஸ்மேன்களை இழந்து ஹைதராபாத் தடுமாறியது. இதன் பின் நமன் ஓஜாவும், இயான் மோர்கனும் கைகோர்த்தனர். ரன்குவிப்பு வேகமும் மந்தமாகவே இருந்தது.

ஓஜா-மோர்கன் ஜோடி 4-ஆவது விக்கெட்டில் கூட்டாக 50 ரன்கள் சேர்த்து ஓரளவுக்கு கைகொடுத்தது.

இந்த இணையை பிரவீண் தாம்பே பிரித்து வைத்தார். அவர் வீசிய 15-ஆவது ஓவரில் ஓஜா 25 ரன்களுடனும், 18-ஆவது ஓவரில் மோர்கன் 27 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ரவி போபராவும், ஆஷிஸ் ரெட்டியும் களமிறங்கினர்.

கடைசி நேரத்தில் போபரா 23 ரன்களும், ஆஷிஸ் ரெட்டி 11 ரன்களும் சேர்க்க 20 ஓவர்களின் முடிவில் ஹைதராபாத் 5 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் சிறப்பாக பந்துவீசிய குல்கர்னி 3 ஓவர்களில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் எளிதான வெற்றி இலக்கை நோக்கி ரஹானேவும், சாம்சனும் ராஜஸ்தானின் இன்னிங்ûஸத் தொடங்கினர்.

நிதானமாக ஆடிய இந்த ஜோடியின் ஆதிக்கம் 11-ஆவது ஓவரில் முடிவுக்கு வந்தது. போபரா வீசிய பந்தில் சாம்சன் (26 ரன்கள்) ஓஜாவிடம் கேட்ச் ஆனார்.

ரஹானே அரை சதம்: ஒன்டவுனில் களமிறங்கிய கேப்டன் ஸ்மித் கடந்த ஆட்டத்தைப் போல் நிலைக்கவில்லை. கரண் சர்மா ஓவரில் அவர் அடித்த பந்து வார்னரிடம் சிக்கியதால் 13 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்துவந்த கருண் நாயர் (ஒரு ரன்) வந்தவேகத்தில் போபராவின் ஓவரில் அவரிடமே கேட்ச்சானார்.

மறுமுனையில் அரை சதத்தை நோக்கி மெல்ல நகர்ந்து கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் ரஹானேவுடன் ஸ்டூவர்ட் பின்னி இணைந்தார். 15.5-ஆவது ஓவரில் ரஹானே அரைசதத்தை பூர்த்திசெய்ய அணியும் 100 ரன்களை எட்டியது.

18.4-ஆவது ஓவரில் அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் போல்ட்டின் பந்துவீச்சில் ரஹானே போல்டானார். அவர் 62 ரன்களுடன் (56 பந்து, 9 பவுண்டரி) வெளியேறினார்.

பிரவீண் குமார் வீசிய கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளில் ஃபாக்னர், பின்னி தலா ஒரு ரன்கள் எடுத்தனர். மூன்றாவது பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 4 மற்றும் 5-ஆவது பந்துகளில் இருவரும் தலா ஒரு ரன்கள் ஓடினர்.

திடீர் பரபரப்பு: கடைசி ஒரு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா அல்லது டிரா செய்யுமா என ஆட்டத்தில் திடீரென பரபரப்பு உண்டானது. ஹைதராபாத் அணியினரும் ஃபீல்டிங்கில் உஷாராக இருந்தனர். இருப்பினும் கடைசிப் பந்தில் ஃபாக்னர் பவுண்டரி விளாசினார். 20 ஓவர்களில் ராஜஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*