பலத்த கெடுபிடிகளுக்கிடையே திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஸ்ருதிஹாசன் (video)

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலமலை காட்டுப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை போலீசார் சுட்டுக் கொன்றார்கள். இந்த சம்பவத்தில் மேலும் பலர் தப்பி ஓடிவிட்டதால் அவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி அருகில் உள்ள ‘தலைக்கோணை’ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.

விஜய்யுடன், நடிகை சுருதிஹாசன், பிரபு மற்றும் துணை நடிகர், நடிகைகள் உட்பட சுமார் 300 பேர் அந்த பகுதியில் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ரூ.1 கோடி செலவில் பிரமாண்ட செட் அந்த பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது.

போலீசாரின் தாக்குதலில் தப்பிய செம்மரக் கடத்தல்காரர்கள் இந்த தலைக்கோணம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என ஆந்திர போலீசார் கருதினர். சினிமா படப்பிடிப்பு நடைபெறும் இடத்திலும் போலீசார் சோதனை நடத்தினர். ஆயுதம் தாங்கிய 30 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், நேற்று காலை படப்பிடிப்பில் இருந்த நடிகை சுருதிஹாசன் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பான மனநிலை நிலவுகிறது. படப்பிடிப்பில் போலீஸ் கெடுபிடியினாலும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ஸ்ருதி ஹாசன், திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*