9 வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் உங்களின் கதிரவன்!

பிறப்பு : - இறப்பு :

தனது கன்னிப் பயணத்தை கடந்த 2006 ஆம் ஆண்டு “கதிரவனின் செய்தியில் காணுங்கள் உலகை“ ,          “ காலத்தின் கண்ணாடி கதிரவன்.கொம்“ என்னும் மகுடவாசகங்களுடன் mykathiravan.com என்னும் பெயரில் தமிழ்ப் புதுவருடத்துடன் தனது செய்திப் பயணத்தை ஆரம்பித்த கதிரவன் தத்தித் தளிர் நடை நடந்து இன்று தனது 9 வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறான்.

முதன் முதலில் mykathiravan என்ற பெயரை வைக்கக் காரணம்,  mykathiravan என்று உச்சரிக்கும் போது அதனை உச்சரிக்கும் ஒவ்வொருவரும் தனது கதிரவன் என்று உணரவேண்டும் என்ற எண்ணத்தினாலாகும்.

பின்பு 2011 ஆம் ஆண்டில் kathiravan.net என்னும் பெயர் மாற்றத்துடன் தன் செய்திக் கதிர்களை உலகமெங்கும் பரப்ப ஆரம்பித்தான்.

2012 இலே kathiravan.com என்ற பெயர் மாற்றத்துடன் ஆரம்பித்து இன்றுவரையிலும் தன் செய்திப்ணியை ஆற்றிவருகிறான். com என இருந்தாலேயே நம்மவர்கள் அதனை இணையத்தளமாக  பார்க்கும் நிலைகாணப்படுகிறது. அதனால் நாம் kathiravan.com என்ற பெயரைச் சூட்டினோம். எனினும் மேற்படி kathiravan.com  என்ற பெயரானது ஏற்கனவே பதியப்பட்டிருந்ததினால் நாம் அப்பெயரைக் கொண்ட Domain ஐ உரிய பெறுமதியைக் கொடுத்துக் கொள்வனவு செய்திருந்தோம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கீழ்வரும் தளங்களும் பல்வேறு சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

www.kathiravan.tv  என்பது அனைத்து விதமான பல்சுவை நிகழ்ச்சிகைளைத் தொகுத்துத் தருகிறது. அத்துடன் “கதிரவன் உலா“ என்பது கதிரன் ரிவி யின் சிறப்பம்சமாகும். இதில் அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள், தமிழ் உணர்வாளர்கள், கலைஞர்கள் போன்றோரின் நேர்காணல் இடம் பெறுகிறது.

aanmeekam.kathiravan.com என்பது புலம்பெயர் மக்கள் தம் சமய விழுமியங்களை அறிந்து கொள்ள உதவுகிறது.

kathiravankadhal  இவ்வுலகு காதலாலும் அன்பாலுமே இயங்குகிறது . அந்தவகையில் இது காதலர்களுக்கானது.

kathiravanathavam என்பது சிறுவர்களுக்கான பக்கமாகும். இது குழந்தைகளின் தமிழ் அறிவை வளர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது.

fm.kathiravan.com  அனைத்து விதமான வானொலிகளையும் ஓரிடத்தில் தரும் தளமாகும்.

kathiravanphotos.com  இது புலம் பெயர்ந்தள்ள எம்மவர்கள் மற்றும், தாய் மண்ணில் நடக்கும் நிகழ்வுகள்,
பொது நிகழ்வுகள், சினிமா, எழில்மிகு இயற்கை வனப்பு, விநோதமான படங்கள், எழுச்சி நிகழ்வுகள், கோவில்களின் திருவிழாக்கள் போன்றவற்றின் புகைப்படங்கள் கொண்ட தொகுப்பாகும்.

கதிரவனின் விளம்பரக் காணொலிகள் ஒரு மீள்பார்வை!

கதிரவன் தன் செய்திப் பயணத்தை ஆரம்பித்த காலங்களில் மிகவும் வசதி குறைந்த இணையத் தொழிநுட்பத்தையே கொண்டிருந்தான் பலவிடயங்களையும் தனித்தனியாகவும் ஒவ்வொன்றாகவுமே பதிவேற்ற வேண்டியிருந்தது.

படிப்படியாக தனது தொழிநுட்பத்தினை வளர்த்து இன்று முற்றிலும் நவீன தொழிநுட்ப வளத்தினைக் கொண்டு புதிதாக வடிவமைக்கப்பட்டு புது மெருகூட்டப்பட்டு கவர்ச்சிரமான பக்கங்களில் செய்திகளைத் தாங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கதிரவனின் இந்தப் பயணத்தில் தடங்கல்கள் பல வந்தபோதும் சிறிதும் மனந்தளராமல் அவற்றைத்தாண்டி வீறுநடை போட்டு வருடங்கள் எட்டைக் கடந்து ஒன்பதில் காலடி வைக்கும் இத்தருணத்தில் வாசகர்களாகிய உங்களை எண்ணிப்பார்க்கும் போது இறும்பூதெய்துகின்றான்.

உண்மையில் கதிரவனின் இந்த வளர்ச்சிக்கு வாசகர்களாகிய நீங்களும் விளம்பரதாரர்களும் நலன் விரும்பிகளுந்தான் காரணமெனின் அது மிகையில்லை.

இத்தனை வருடகால செய்திப்பணியில் கதிரவன் தான் வரித்துக்கொண்ட கொள்கைகளான தமிழ்த்தேசிய ஆதரவு, அறம்சார்ந்த விடயங்கள், தமிழுக்கு முன்னுரிமை, ஆன்மீகம் என்பவற்றில் எந்தவொரு சமரத்திற்கும் உடன்பட்டதில்லை என்பதையும் வழுவியதில்லை என்பதையும் நீங்கள் நன்கறிவீர்கள்.

இனிவருங்காலங்களிலும் கதிரவன் தான் வரித்துக் கொண்ட கொள்கைகளிலிருந்து மாறாமல் பணியாற்றுவான் என்பதை இத்தருணத்தில் உறுதியோடு கூறிக்கொள்ள விரும்புகின்றான்.

உங்கள் கதிரவன் தன் பணியை சிறப்பாக ஆற்ற வாசகர்கள், விளம்பரதாரர்கள், அன்பர்கள், நண்பர்கள் ஆகிய நீங்கள் இப்போது தரும் ஆதரவைப்போல் பன்மடங்கு ஆதரவை இனிவரும் ஆண்டுகளில் தந்துதவ வேண்டும் எனக உரிமையோடு கேட்டு நிற்கிறான்.

 “கதிரவனின் செய்தியில் காணுங்கள் உலகை“  “ காலத்தின் கண்ணாடி கதிரவன்.கொம்“

நன்றி.

என்றென்றும் வாஞ்சையுடன் உங்கள் கதிரவன் குழுமம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit