பளை வீமன்காமம் வடக்கில் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கிய இராணுவத்தினர்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

எங்கள் வீட்டை இராணுவத்தினர் இடித்துத் தரைமட்டமாக்கி விட்டனர் என்று, காலையில் வந்து இந்தப் பகுதியைப் பார்த்த வர்கள் எனது கணவருக்குத் தொலைபேசியூடாகத் தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர் தலைச் சுற்று வந்து வீட்டிலேயே தங்கி விட்டார். காணியைப் பார்ப்பதற்கு வர மறுத்து விட்டார் என்று அவரது மனைவி தெரிவித்தார்.

பளை வீமன்காமம் வடக்கில், மக்கள் காணிகளில் இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர். முகாம் அமைப்பதற்காக அந்தப் பகுதிகளிலுள்ள வீடுகளை இராணுவத்தினர் தரைமட்டமாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் பளை வீமன்காமம் வடக்கில் ஒரு பகுதி விடுவிக்கப்பட்டது. அதனைப் பார்வையிடுவதற்கு மக்கள் சென்றனர்.

அப்போது அந்தப் பகுதியில் சு.கந்த சாமிப்பிள்ளை (வயது-74) என் பவரது வீடு இடித்து தரைமட்டமான நிலையில் இருந்துள்ளது. இதனைக் காலையில் வந்து குறித்த பகுதியைப் பார்வையிட்ட ஒருவர், வீடு தரைமட்டமாக்கப்பட்ட செய்தியை கந்தசாமிப்பிள்ளைக்குத் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் தலைச் சுற்று வந்து மயக்கமடைந்துள்ளார். அவர் காணியைப் பார்வையிடுவதற்குத் தயாரான நிலையிலேயே இந்தச்சம்பவம் இடம்பெற்றது.

இதன் பின்னர், அவரது மனைவியே காணியை வந்து பார்வையிட்டார். அவர்களது காணி இராணுவத்தின் முகாம் அமைந்துள்ள பகுதியில் இருப்பதுடன், அவர்களது வீட்டு அடித்தளத்தை மாத்திரம் மிச்சம் வைத்து அதன் மேல் அவர்கள் முகாம் அமைத்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டின் பின் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தப் பகுதியிலுள்ள ஆலயங்களில் பூசை மேற்கொள்வதற்கு இராணுவத்தினர் அனுமதித்து இங்கு வந்திருந்தோம்.

அதன்போது, எமது வீடுகள் கூரைகள் மற்றும் கதவு, யன்னல் நிலை என்பன இல்லாமல் காணப்பட்டன. தற்போது வந்து பார்க்கும் போது, வீடே இல்லாமல் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கியுள்ளனர்.

எமது வீடுகள் இருந்த இடங்களில் அவர்கள் முகாம் அமைத்துள்ளனர் என்று மக்கள் குறிப்பிட்டனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*