ஜேம்ஸ் ஃபாக்னர் அசத்தல்: பஞ்சாபை வீழ்த்தியது ராஜஸ்தான்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஜேம்ஸ் ஃபாக்னரின் அசத்தலான பேட்டிங் மற்றும் பந்துவீச்சினால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஜார்ஜ் பெய்லி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பேட்டிங்கை தொடங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹானேவும், சஞ்சு சாம்சனும் களமிறங்கினர். முதல் பந்திலேயே சாம்சன் பவுண்டரி அடித்து உற்சாகமாக ஆட்டத்தை தொடங்கினார்.

அனுரீத் சிங் வீசிய இரண்டாவது ஓவரில் ரஹானே உயரத்தில் தூக்கி அடித்த பந்தை மிட்ஆஃப் திசையில் நின்றிருந்த அக்ஷர் பட்டேல் கேட்ச் செய்தார். இதனால் அவர் டக் அவுட்டில் வெளியேறினார்.

சிறிது நேரத்திலேயே சாம்சனும் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்து 5 ரன்களுடன் வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித்தும், கருண் நாயரும் ஃபார்ட்டனர்சிப் அமைக்க முயன்றனர். ஆனால் அதற்கு பஞ்சாப் அணி ஒத்துழைக்கவில்லை.

5.5-ஆவது ஓவரில் பட்டேல் வீசிய பந்தை சிக்ஸர் விளாசிய கருண்நாயர் (8 ரன்கள்) அவரின் அடுத்த பந்தில் போல்டானார்.

நிதானமாக ஆடிய ஸ்மித் 23 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்பட 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்ததால் ராஜஸ்தான் அணியின் ரன்குவிப்பு வேகம் சற்று குறைந்தது. 10 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் 73 ரன்கள் எடுத்திருந்தது.

ஃபாக்னர் விளாசல்: பின்னர் களமிறங்கியவர்களில் ஹூடாவும் (30 ரன்கள், 15 பந்து, 3 சிக்ஸர்), ஜேம்ஸ் ஃபாக்னர் மட்டுமே அதிரடியாக விளையாடினர்.

குறிப்பாக அனுரீத் சிங் வீசிய 19-ஆவது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என ஃபாக்னர் வெளுத்து வாங்கியதால் அந்த ஓவரில் மட்டும் 20 ரன்கள் கிடைத்தது.ஆனால் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபாக்னர் கடைசி ஓவரில் மில்லரிடம் கேட்ச் கொடுத்தார். அவர் 46 ரன்கள் (33 பந்து, 2 பவுண்டரி 3 சிக்ஸர்) சேர்த்து ஆட்டமிழந்தார்.

20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. இதில் 21 எக்ஸ்ட்ராஸ்களும் அடங்கும். பஞ்சாப் தரப்பில் அனுரீத் சிங் 3 விக்கெட்டுகளும் ஜான்சன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

அதிர்ச்சி தொடக்கம்: 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது இன்னிங்ûஸ தொடங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் சேவாக் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார்.

மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய் தனது பங்குக்கு 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 37 ரன்கள் (32 பந்து) எடுத்த நிலையில் ரன் அவுட்டில் வெளியேறினார். இதுவே பஞ்சாப் அணி வீரர்களில் அதிகபட்ச ரன்னாகும்.

தொடர்ந்து வந்த ரித்திமான் சஹாவும், மேக்ஸ்வெல்லும் தலா 7 ரன்களில் பெவிலியன் திரும்பினர். 13 ஓவர்கள் முடிவின் போது பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களை எடுத்திருந்தது.

அடுத்த ஓவரிலேயே மில்லர் (23 ரன்கள்) விளாசிய பந்து நேராக ஃபாக்னர் கையில் அடைக்கலமானது. இதன் பின்னர் பஞ்சாப் அணியின் வெற்றி கனவு மெல்ல மெல்ல களையத் தொடங்கியது. பின்னர் வந்தவர்களில் யாரும் அணியின் வெற்றிக்கு கைகொடுக்கவில்லை.

அபாரமான கேட்ச்: ஃபாக்னர் வீசிய 18.5-ஆவது ஓவரில் பஞ்சாப் கேப்டன் பெய்லி விளாசிய பந்தை பவுண்டரி எல்லையிலிருந்து டிம் சௌதீ அபாரமாக கேட்ச் செய்ய முயன்றார். பந்தை பிடித்த அவர் பவுண்டரி எல்லைக்குள் விழ நேர்ந்த போது அருகில் ஓடிவந்த கருண் நாயரை நோக்கி பந்தை வீசினார். கருண் அதனை கவனமாகப் பிடித்தார்.

இதனால் சிக்ஸர் கிடைக்கும் என்று எதிர்பார்த்த பெய்லி (24 ரன்கள், 18 பந்து) ஏமாற்றத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ராஜஸ்தான் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் (3 விக்கெட்) அசத்தலாக விளையாடிய ஃபாக்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

சுருக்கமான ஸ்கோர்

ராஜஸ்தான் 162/7

ஃபாக்னர் 46

ஸ்டீவன் ஸ்மித் 33

பஞ்சாப் 136/8

முரளி விஜய் 37

பட்டேல், பெய்லி 24

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*