தேசிய விருது நடிகருடன் கைகோர்க்கும் அஞ்சலி

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆந்திராவில் செட்டிலான அஞ்சலி, தற்போது தமிழில் ரீஎன்ட்ரீ கொடுத்து வருகிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, திரிஷா, சூரி ஆகியோர் நடித்து வரும் ‘அப்பாடக்கர்’ படத்தில் அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் விமலுடன் இணைந்து மாப்ள சிங்கம் படத்திலும் நடித்து வருகிறார். தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்திருக்கிறது.

ஜிகர்தண்டா படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்ராஜ் இயக்கவிருக்கும் படம் ‘இறவி’. இதில் நாயகன்களாக விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதில் நடிக்க கதாநாயகிகள் தேடல் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. தற்போது இதில் ஒரு கதாநாயகியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமாகியிருக்கிறார். மேலும் இதில் நடிக்க விருக்கும் கதாநாயகிகள் தேடல் நடந்து வருகிறது.

விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக சி.வி.குமார் தயாரிக்க இருக்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit