’கொம்பன்’ இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஞானவேல்ராஜா

பிறப்பு : - இறப்பு :

பல தடைகளைத்தாண்டி கடந்த வாரம் வெளிவந்த கொம்பன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 21 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதால் படக்குழுவினர் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநருக்கு மற்றுமொரு இன்ப அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. கொம்பன் படம் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இயக்குநர் எம்.முத்தையாவிற்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இன்னோவா கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளர்.

தன்னை மட்டுமின்றி தமிழ் திரையுலக ரசிகர்களையும் திருப்தி செய்த இயக்குநருக்கு தான் அளிக்கும் ஒரு சிறு பரிசுதான் இந்த இன்னோவா கார் என்றும் ஞானவேல்ராஜா கூறியுள்ளார். அதோடு கொம்பன் படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜுக்கும் ரூ 10 லட்சம் பரிசாக ஞானவேல்ராஜா கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit