ஐ.பி.எல்-8; 1 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றி

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஸ்மித் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்களும், பிரான்கோயிஸ் 32 ரன்கள், தோனி 2 சிக்ஸர்களுடன் 30 ரன்களும் எடுத்திருந்தனர். 20 ஓவர்களின் முடிவில் சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியில் அதிகபட்சமாக நாதன் கவுல்டர் 3 விக்கெட்டுகளையும், டோமினிக், இம்ரான், அமித் மிஸ்ரா, டூமினி ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

151 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் மால்கெல் அபாரமாக விளையாடி 73 ரன்களை (8 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) குவித்தார். கேதார் ஜாதவ் 20 ரன்களும், அகர்வால் 15 ரன்களும் குவித்தனர். 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை குவித்த நிலையில் 1 ரன் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்தது டெல்லி அணி. நூலிழையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணியில் அதிகபட்சமாக ஆஷிஷ் நெஹ்ரா 3 விக்கெட்டுகளையும், பிராவோ 2 விக்கெட்டுகளையும், மோஹித் ஷர்மா, ஈஸ்வர் பாண்டே, அஸ்வின் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*