8வது ஐ.பி.எல்.: சென்னை அணி 5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 49!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. முதலாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியிருந்தது.

இன்றைய 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் டுமினி பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் நடக்கவில்லை. மூன்று கேலரிகள் முறையான அனுமதியின்றி கட்டப்பட்டதாக எழுந்த பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியிருந்ததால் அப்போது சென்னை அணிக்குரிய உள்ளூர் ஆட்டங்கள் ராஞ்சிக்கு மாற்றப்பட்டிருந்தன.

தற்போது சென்னையில் மீண்டும் ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதால் மைதானமே களைகட்டியிருக்கிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*