ஸ்ருதிஹாசனை பலாத்காரம் செய்ய முயன்றாரா ஆந்திர அமைச்சர்?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ஸ்ருதிஹாசனைப் பற்றி அடிக்கடி ஏதாவது பரபரப்பான செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கும் போலிருக்கிறது. கடந்த வாரங்களில் தயாரிப்பு நிறுவனத்துடன் மோதிய சம்பவம் வழக்கு வரை சென்றது. தற்போது ஆந்திர அமைச்சர் ஒருவர் ஸ்ருதிஹாசனை அழ வைத்த சம்பவம் டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் ஐதராபாத்திலிருந்து திருப்பதி செல்லும் விமானத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. விமானம் புறப்பாடு பற்றிய அறிவிப்பை விமானி அறிவித்த பின்னும் அந்த ஆந்திர அமைச்சர் அவருடைய மொபைல் போனை அணைக்காமல் சத்தமாக பேசிக் கொண்டேயிருந்தாராம். விமானத்தில் பயணித்த மற்றவர்களைப் பற்றி அவர் கவலைப்படவேயில்லையாம். ஸ்ருதிஹாசனும் அவரிடம் மொபைல் போனை ஸ்விட்ச் ஆப் செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார், ஆனால் அவர் யார் சொல்வதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லையாம்.

அதைத் தொடர்ந்து இருவருக்குமிடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது அமைச்சர் சில கடுமையான வார்த்தைகளைப் பேசியதாகவும், மேலும் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஸ்ருதிஹாசன் அதிர்ச்சியடைந்து அழ ஆரம்பித்ததாகவும் சொல்கிறார்கள். அதன் பின் விமானப் பணிப் பெண் வந்து அமைச்சரிடம் போனை ஸ்விட்ச் ஆப் செய்ய வைத்து, ஸ்ருதியிடமும் பேசி நிலைமையை சரி செய்தார் என்கிறார்கள். இந்த விவகாரம் டோலிவுட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த செய்தி உண்மைஇல்லை என்றும், பரபரப்பாக செய்திகளை வெளியிட்டு படவாய்ப்புகளை பிடிக்கவேண்டும் என்பதற்காக, ஸ்ருதிஹாசனே இதுபோன்ற வதந்தியை பரப்பிவிடுவதாக சக நடிகைகள் தெரிவித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit