இன்று முதல் இந்திய இரவுகளில் ஐபிஎல் வெளிச்சம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

உலகக் கோப்பை முடிந்து விட்டது. ஆனால், இன்னும் 47 நாள்களுக்கு இந்திய இரவுகளை பிரகாசிக்கச் செய்யும் ஐபிஎல் தொடர் தொடங்கி விட்டது. கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெறவுள்ள எட்டாவது ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், மும்பையும் மோதவுள்ளன.

டி-20 ஆட்டம் ஆதிக்கம் செலுத்தும் இந்த சூழலில் 50 ஓவர் ஆட்டத்துக்கு கிராக்கி இருக்குமா என்ற சந்தேகமே எழாத வகையில், சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் நடந்த உலகக் கோப்பைத் தொடர் வெற்றி பெற்றது. மாற்றி அமைக்கப்பட்ட

ஃபீல்டிங் விதிமுறைகள், பேட்ஸ்மேன்களின் புதுவிதமான ஷாட்கள் என 50 ஓவர் உலகக் கோப்பை மெருகேறி வருகிறது.

ஆனால், பணம் கொழிக்கும், கிரிக்கெட் உலகில் பெரிதாகப் பேசப்படும் ஐபிஎல் தொடரில் புதுமைகள் இல்லை என்பது நிபுணர்கள் கருத்து. பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்பான்சர் உரிமத்தைத் திரும்பப் பெற்று விட்டன, ஆண்டுக்கு ஆண்டு நிதி விவகாரங்களில் பின்னடைவு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், எப்போதோ தொடங்கிய இங்கிலீஷ் பிரீமியர் லீக், லா லிகா போன்ற கால்பந்து தொடர்கள் ஆண்டுக்கு ஆண்டு தனது ரசிகர் வட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. காரணம், ஒவ்வோர் ஆண்டும் ஏதாவதொரு புதுமைகளைப் புகுத்தி வருகிறது. ஆனால், 2008-இல் இருந்து 2014 வரை ஐபிஎல் தொடர் பேட்ஸ்மேன்களுக்கான ஆட்டமாக இருந்து வருகிறது. ஐசிசி ஃபீல்டிங் விதிகளில் மாற்றம் செய்ததுபோல, பந்துவீச்சாளர்களும் முக்கியத்துவம் பெறும் வகையில் சில விதிகளை ஐபிஎல் ஏற்பாட்டாளர்கள் மாற்றிப் பார்க்கலாம் என்பது ஒரு தரப்பினர் வாதம்.

ஒரு சில குறைகள் இருந்தாலும், கடந்த வாரம் வரை எதிரெதிர் துருவங்களில் மோதிக் கொண்டிருந்த வீரர்கள் இன்று ஒரே ஓய்வு அறையைப் பகிர்ந்து கொள்வது, ரிக்கி பாண்டிங்கின் பயிற்சி, திராவிட்டின் ஆலோசனை என ஜாம்பவான்கள் ஏதோ ஒரு விதத்தில் கிரிக்கெட்டுக்காக ஒருங்கிணைந்திருப்பதும் நல்ல விஷயமே.

கொல்கத்தா – மும்பை இன்று மோதல்

கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் 2012, 2014-இல் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி, 2013 சாம்பியனான மும்பையை எதிர்கொள்கிறது.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் சந்தேகப் பந்துவீச்சு காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த மாயாஜால சுழற் பந்துவீச்சாளர் சுனில் நரைன் மீண்டும் அணிக்குத் திரும்பியதில் கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா உற்சாகம் அடைந்துள்ளது. அவருடன், ரூ.2.4 கோடிக்கு வாங்கப்பட்ட கர்நாடகத்தைச் சேர்ந்த கே.சி.கரியப்பா உள்பட மேலும் இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் அணியில் உள்ளனர். வேகப்பந்துவீச்சு வரிசையில் உமேஷ் யாதவ், மோர்னே மோர்கெல் ஆகிய திறமையான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். யூசுஃப் பதான் சமீப காலமாக உச்சத்தில் இல்லை என்றாலும், அவர் நின்று விட்டால் எந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றவல்லவர் என்பதையும் மறுக்க முடியாது.

ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியில் ஆரோன் ஃபின்ச், அம்பாதி ராயுடு, பொல்லார்டு, கோரி ஆண்டர்சன் என சர்வதேச வீரர்களுடன் ஆதித்யா தாரே, பார்த்தீவ் படேல் போன்ற உள்ளூர் வீரர்களும் சாதிக்கக் காத்திருக்கின்றனர். முதல் முறையாக ரிக்கி பாண்டிங் பயிற்சியாளர் பொறுப்பேற்றிருப்பது இந்த ஆட்டத்தை கூடுதலாக கவனிக்க வைத்துள்ளது. பந்துவீச்சைப் பொருத்தவரை வழக்கம் போல மலிங்கா நம்பிக்கை அளிப்பார். அவருடன் வினய் குமார், சுழலில் ஹர்பஜன், ஓஜா ஆகியோரும் பக்க பலமாக இருப்பர்.

அணிகள் விவரம்
மும்பை

ரோஹித், ஆரோன் ஃபின்ச், அம்பாதி ராயுடு, அபிமன்யு மிதுன், ஆதித்யா தாரே, பார்த்தீவ் படேல், பொல்லார்டு, கோரி ஆண்டர்சன், மலிங்கா, ஹர்பஜன், ஜஸ்ப்ரீத் பும்ரா, ஹேஸில்வுட், மர்சன்ட் டி லங்கே, பவன் சுயல், ஷ்ரேயஸ் கோபால், சிம்மன்ஸ், ஓஜா, மிச்செல் மெக்கிளீனகன், பிளிஸ்ஸார்டு, அக்ஷய் வகாரே, நிதீஷ் ராணா, சிதேஷ் லத், ஹர்தீக் பாண்டியா, ஜகதீஷ் சுஜிட்ச், உன்முக்த் சந்த், வினய் குமார்.

கொல்கத்தா

கம்பீர், ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, சூரியகுமார், ரியான் டென் டஸ்சடே, ஷாகிப் அல்ஹசன், யூசுஃப் பதான், ஆண்ட்ரூ ரசெல், குல்தீப், மோர்னே மோர்கெல், பேட்ரிக் கம்மின்ஸ், பியூஷ் சாவ்லா, சுனில் நரைன், ஜான் போதா, அஸார் மகமூத், உமேஷ் யாதவ், வீர் பிரதாப் சிங், ஜேம்ஸ் நீஷம், பிராட் ஹாக், ஆதித்யா கர்ஹல், சுமித் நர்வால், கே.சி.கரியப்பா, வைபவ் ராவல், ஷெல்டன் ஜாக்சன்.

கேப்டன்கள் கருத்து…

இந்த சீசனின் முதல் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. முதலில் பேட் செய்தாலும் சரி, பந்து வீசினாலும் சரி தொடக்கம் சரியாக இருக்க வேண்டும். ஈடன் கார்டன் மைதானம் எப்போதுமே எங்களுக்கு சாதகமாக இருக்கும்.

ரோஹித் சர்மா, மும்பை கேப்டன்.

சுனில் நரைன் கொல்கத்தாவின் ஓர் அங்கம். சாதாரணமாக பந்து வீசினாலும் கூட, அவர் எங்கள் சொத்து. அவருக்குப் பதிலாக வேறு ஒரு சுழற்பந்துவீச்சாளரை வைத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.

ஈடன் கார்டன் மைதானத்தை சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக்கி நாங்கள் வெற்றி பெற்று வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. அது உண்மை அல்ல. இதுபோன்ற மைதானங்களில் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் வெற்றி பெறுவது என்பது சிரமம்.

கெளதம் கம்பீர், கொல்கத்தா கேப்டன்.

ஜாம்பவான்களின் கடைசி வாய்ப்பு

கெளதம் கம்பீர், ஹர்பஜன், சேவாக், யுவராஜ், ஜாகீர் கான் ஆகிய ஐந்து வீரர்களுக்கும் வயது 30-ஐக் கடந்து விட்டது. கம்பீர்}சேவாக் இணைக்கு மாற்றாக ஷிகர் தவண்}ரோஹித் சர்மா என இந்திய அணியின் தொடக்க ஜோடி ஒரு வழியாக செட்டாகி விட்டது. எனவே, சேவாக், கம்பீர் இனி இந்திய அணிக்குத் திரும்ப முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அவர்கள் மட்டுமல்ல ஜாகீர், யுவராஜ், ஹர்பஜன் கதையும் அதுதான். இந்த ஐவரும் தங்கள் திறமையை நிரூபிக்கக் கிடைத்த கடைசி வாய்ப்பே இந்த ஐபிஎல்.

கவனிக்கத்தக்க பேட்ஸ்மேன்கள்

டி வில்லியர்ஸ்: ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அதி வேக அரை சதம், அதி வேக சதம், அதி வேக 150 அடித்த டி வில்லியர்ஸ் பெங்களூரு அணியின் ரன் எடுக்கும் இயந்திரமாகத் திகழ்ந்து வருகிறார். இதுவரை 88 ஐபிஎல் ஆட்டங்களில் 2,057 ரன்கள் குவித்துள்ள டி வில்லியர்ஸ், தற்போது தனது கிரிக்கெட் வாழ்வின் உச்சத்தில் இருப்பதால், இந்த ஐபிஎல் தொடரில் ஏதாவது ஒரு வியக்கத்தக்க சாதனை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கலாம்.

பிரென்டன் மெக்கல்லம்: எதிரணியின் பந்துவீச்சை எப்படியெல்லாம் சின்னா பின்னமாக்கலாம் என்பதை சமீபத்திய உலகக் கோப்பைத் தொடரில் நிரூபித்தவர் மெக்கல்லம். தொடக்கத்தில் எப்படி ரன் குவிக்க

வேண்டும் என்பதை உணர்ந்து வைத்திருக்கும் இவரை, சென்னை அணி நன்கு பயன்படுத்திக் கொள்ளும் என நம்பலாம்.

யுவராஜ் சிங்: சந்தேகமே இன்றி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் யுவராஜ் சிங். கடந்த முறை இவரை பெங்களூரு அணி ரூ.14 கோடிக்கு வாங்கியது. இந்த முறை தில்லி அணி ரூ.16 கோடிக்கு வாங்கி வரலாறு படைத்துள்ளது. அதிக விலை என்ற முத்திரை குத்தப்பட்டிருப்பதால், சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதோடு, இந்திய அணிக்குத் திரும்பவும் இது ஒரு நல்ல களம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*